கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி அன்று இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் தயாரித்து அனுப்பிய சந்திரயான் மூன்று விண்கலத்தின் விக்ரம் லேண்டர் பாகம் வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் தரை இறங்கியது இந்திய நாட்டின் பெருமைக்குரிய நிகழ்வாகும்.
இதன்மூலம் நிலவின் தென் துருவத்தில் தர இறங்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா அடைந்தது அதற்கு பிறகு ரோவர் நிலவின் மேற்பரப்பில் ஊர்ந்து சென்று கிட்டத்தட்ட 14 நாட்கள் ஆய்வு செய்து பல அறிய தகவல்களையும் புகைப்படங்களையும் அனுப்பியது.
இந்த வெற்றியை தொடர்ந்து இஸ்ரோ ஜப்பானுடன் சேர்ந்து சந்திரயான் நான்கு திட்டத்தை லுபெக்ஸ் என்னும் பெயரில் செயல்படுத்த உள்ளது. அதோடு இந்த திட்டத்தில் நிலவிற்கு ரோபோட் தொழில்நுட்பத்தினால் ஆன ரோவர் மற்றும் லேண்டரை அனுப்பி ஆய்வு செய்வதோடு நிலவின் மேல் பரப்பில் உள்ள மாதிரிகளை சேகரித்து பூமிக்கு கொண்டுவர ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளதாகவும் இதற்காக இந்த திட்டத்தில் இரண்டு ராக்கெட்டுகள் பயன்படுத்தப்பட உள்ளதாகவும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
Source : The Hindu Tamil thisai