கட்டிமுடிக்கப்பட்டு 4 ஆண்டுகளாக திறக்கப்படாத நியாயவிலை கடை: அவதியில் பொதுமக்கள்!

கடந்த 2021 ஆம் ஆண்டு திருப்பத்தூர் மாவட்டத்தில் மாடப்பள்ளி ஊராட்சியில் ரூபாய் 8.59 லட்சம் மதிப்பீட்டில் புதிய நியாய விலை கட்டிடம் கட்டப்பட்டது ஆனால் இந்த கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையிலும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது
புது நியாய விலை கட்டிடம் திறக்கப்படாத காரணத்தினால் பொதுமக்கள் நீண்ட தூரம் பயணம் மேற்கொண்டு மடவளாம் பகுதியில் உள்ள சிறிய நியாய விலை கடைக்கு சென்று பொருட்களை வாங்கி வருகின்றனர் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட கூட்டுறவு துறை அலுவலகம் வட்டாட்சியர் வரை அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை மனுக்களையும் அளித்துள்ளனர்
இருப்பினும் எந்தவித பயனும் இல்லை எங்கள் ஊரிலே ஒரு பெரிய நியாய விலை கடை இருந்தும் நாங்கள் நெடுந்தூரம் பயணிக்க வேண்டி உள்ளது என்று அப்பகுதி பொதுமக்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்