பிரதமர் மோடியை சந்தித்த இங்கிலாந்து பிரதமர்!! ஏவுகணைகளுக்காக ரூ.4,155 கோடிக்கு ஒப்பந்தம்!!
125 பேர் கொண்ட குழுவுடன் இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர் அரசு பயணம் மேற்கொண்டு மும்பை வந்தடைந்தார். இந்நிலையில் மும்பையில் இருக்கும் மகாராஷ்டிரா ஆளுநர் மாளிகையில் இங்கிலாந்து பிரதமரும், இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினர்.
அப்போது இங்கிலாந்திடமிருந்து ரூ.4,155 கோடியில் மார்லெட் இலகுரக பல்நோக்கு ஏவுகணைகளை வாங்கப் போவதாக ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின் வழியாக இந்தியா தங்களுடைய வான்வழி பாதுகாப்பு திறனை மேம்படுத்தும் என்றும், பாதுகாப்பு அமைச்சகத்தின் எதிர்கால தேவைகளை பூர்த்தி செய்வதற்கு இது உதவியாக இருக்கும் என்று தெரிகிறது.
இதனால் 700க்கும் ஏற்பட்டோருக்கு மேற்கு அயர்லாந்தில் வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இரண்டு நாடுகளுக்கு இடையில் கடற்படையில் இயங்கும் கப்பல்களில் மின்சாரம் இயக்கும் இயந்திரங்களை மேம்படுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இதைத்தொடர்ந்து பிரதமர் மோடி இங்கிலாந்தை சேர்ந்த 9 பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் தங்களுடைய கிளைகளை நிறுவும் என்றும், இதனால் இந்திய மாணவர்கள் பயன்பெறுவார்கள் என்று கூறினார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய இரண்டு நாடுகளின் உறவால் நாட்டின் பொருளாதாரமும், முன்னேற்றமும் அதிகரிக்கும் என்றார். இதைத்தொடர்ந்து இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர், இங்கிலாந்து மற்றும் இந்திய ஆகிய இரண்டு நாடுகளும் புதிய உறவை ஏற்படுத்தி வருவதாகவும், இவை எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இருப்பதாக தெரிவித்தார்.