தமிழகத்தில் 44 மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு பயிற்சியுடன் 44 ட்ரோன்கள் வழங்கப்பட்டுள்ளன:மத்திய வேளாண் இணையமைச்சர்!

Update: 2025-07-29 16:00 GMT

நாடு முழுவதும் வேளாண்துறையில் புதிய மற்றும் நவீன தொழில்நுட்ப பயன்பாட்டை அதிகரிக்க மத்திய அரசு தொடர்ந்து முன்னுரிமை அளித்து வருகிறது வேளாண் புத்தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் 1,943 நிறுவனங்களுக்கு 146 கோடி ரூபாய் நிதி ஆதரவு வழங்கப்பட்டுள்ளது நமோ ட்ரோன் சகோதரிகள் திட்டம் புதுமை மற்றும் வேளாண் தொழில் மேம்பாட்டுத் திட்டம் உள்ளிட்ட திட்டங்களும் செயல்படுத்தப்படுகிறது 

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை டிஜிட்டல் வேளாண் இயக்கம் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது தமிழ்நாடு மின் ஆளுகை அமைப்பு தேசிய தகவல் மையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இணைந்து செயல்படுகின்றன இதன் மூலம் நிலப்பதிவு ஒருங்கிணைப்பு பயிர் தரவுகள் டிஜிட்டல் வேளாண் இயக்கத்தின் கீழ், பயிர் சாகுபடி நடைமுறைகள் போன்றவை எளிதாக மேற்கொள்ளப்படுகின்றன நமோ ட்ரோன் சகோதரிகள் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ட்ரோன் பயிற்சி அளிக்கப்பட்டு ட்ரோன்களும் வழங்கப்படுகின்றன

தமிழ்நாட்டில் 2023-24-ம் ஆண்டில் 44 மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு 44 ட்ரோன்கள் வழங்கப்பட்டுள்ளன என்று மக்களவையில் மத்திய வேளாண்துறை இணையமைச்சர் ராம்நாத் தாக்கூர் தெரிவித்துள்ளார் 

Tags:    

Similar News