மணல் கொள்ளை.. ரூ.4,730 கோடி மோசடி.. தமிழக டி.ஜி.பிக்கு அமலாக்கத்துறை பரபர கடிதம்..

Update: 2024-06-28 11:18 GMT

தமிழ்நாட்டில் சட்டவிரோதமாக மணல் கடத்தப்படும் விவகாரம் தொடர்பாக தமிழக டி.ஜி.பி ஷங்கர் ஜிவால் அவர்களுக்கு அமலாக்கத்துறை கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளது. அமலாக்கத்துறை கடிதத்தில், சட்டவிரோதமாக மணல் அள்ளும் விவகாரத்தில் ரூ. 4,730 கோடி  மோசடி நடந்து இருப்பதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. தமிழ்நாட்டில் நடைபெற்ற மணல் குவாரி முறைகேடு தொடர்பாக தமிழ்நாடு டிஜிபிக்கு அமலாக்கத்துறை பரபரப்பு கடிதம் எழுதி உள்ள செய்தி தான் தற்போது தமிழகத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்படும் ஒரு செய்தியாக அறியப்படுகிறது. அரசு 490 ஏக்கர் அளவுக்கு மணல் அள்ள அனுமதி அளித்துள்ள நிலையில் 2,450 ஏக்கர் அளவுக்கு மணல் அள்ளப்பட்டுள்ளது என குற்றம்சாட்டப்பட்டு உள்ளது.


தமிழ்நாட்டில் சட்டவிரோதமாக மணல் அள்ளும் விவகாரத்தில் ரூ.4,730 கோடி மோசடி செய்துள்ளதாக அமலாக்கத்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக ஏற்கனவே அமலாக்கத்துறை சார்பில் வருமான வரித்துறை, GST கவுன்சிலுக்கு கடிதம் எழுதப்பட்ட நிலையில், தற்போது டிஜிபிக்கு கடிதம் எழுதி இருக்கிறது. இந்த விவகாரத்தில் மாநில அரசு முறையான நடவடிக்கை எடுக்க தவறி விட்டதாக குற்றம் சாட்டப்பட்ட இருக்கிறது. குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட 4.9 ஹெக்டேர் அளவை தாண்டி 105 ஹெக்டேர் அளவுக்கு மணல் அள்ளியதாக டி.ஜி.பி.,க்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதி உள்ளது. மேலும் இதில் அரசு அதிகாரிகள் உடந்தையோடு தனியார் மணல் ஒப்பந்ததாரர்கள் மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.


தமிழகத்தில் சட்டவிரோதமாக மணல் கடத்தப்படும் விவகாரம் தொடர்பாக சாட்டிலைட் புகைப்படம், டிரோன் காட்சிகள் மூலம் அறிக்கை தயாராக உள்ளது என்று கடிதத்தில் அமலாக்கத்துறை கூறியுள்ளது. இதனால் மணல் குவாரி விவகாரம் மீண்டும் தமிழகத்தில் சூடு பிடித்துள்ளது. "தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தான், மணல், கல் உள்பட கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பான ஏராளமான வழக்குகள் இருந்தாலும், ஆளும் கட்சியினரின் தலைமையில் மணல் உள்பட கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டு வருகின்றன" என்று நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் திமுகவினரை விளாசி வருகிறார்கள்.

Input & Image courtesy: The Commune News

Tags:    

Similar News