ஊரடங்கில் அரசு பள்ளியில் கள்ளச்சாராயம் காய்ச்சிய பெண்கள் உட்பட 5 பேர் கைது - அவிநாசியில் பரபரப்பு!

Update: 2021-05-29 08:11 GMT

அவிநாசி அருகே உள்ள அரசு பள்ளி வளாகத்தில், கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக வந்த தகவலை அடுத்து அங்கு வந்த மதுவிலக்கு பிரிவு காவல்துறையினர் சாராயம் காய்ச்சிய இரண்டு பெண்கள் உட்பட ஐந்து பேரை  கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டம், செம்பாக்கவுண்டம் பாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக அவிநாசி மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் முரளிக்கு தகவல் கிடைத்தது. தகவல் கிடைத்தவுடன், சர்வேஸ்வரன், ஜெகதீசன் உள்ளிட்ட இரண்டு காவல்துறையினர் அந்த பள்ளியில் நேற்று அதிகாலை 2 மணிக்கு திடீர் ரெய்டு நடத்தினர்.

அப்பொழுது அந்த பள்ளியில் உள்ள  கழிப்பறை அருகே, சிலர் காஸ் அடுப்பில் கள்ளச்சாராயம் காய்ச்சி கொண்டிருந்தனர். அவர்கள் அதே பகுதியை சேர்ந்த சீனிவாசன், ஆறுச்சாமி,  விக்னேஸ்வரன், காயத்ரி, சரசாள் என்பது தெரிய வந்தது. இவர்களை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்தனர், அது மட்டுமின்றி அங்கு இருந்த 10 லிட்டர் கள்ளச்சாராயம், 50 லிட்டர் ஊறலை அங்கு வந்த போலீசார் பறிமுதல் செய்தனர்.

பள்ளி வளாகத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சிய ஆண்களை திருப்பூர் சிறையிலும், பெண்களை கோவை மத்திய சிறையிலும் அடைத்தனர்.

Tags:    

Similar News