'லாலு ஆட்சியில் மக்கள் கடத்தலுக்கு பயந்து மாலை 5 மணிக்கு பிறகு வெளியே வரவே பயந்தார்கள்' : நட்டா குற்றச்சாட்டு!

Update: 2021-06-29 00:45 GMT

பீகார் மாநில பா.ஜ.க. செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பா.ஜ.க கட்சி தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மற்றும் பல கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் ஜே.பி. நட்டா காணொளி காட்சி மூலம் இந்த செயற்குழுவில் கலந்து கொண்டவர்களிடம் உரையாற்றினார்.  


இந்த கூட்டத்தில் ஜே.பி.  நட்டா பேசியதாவது "கட்சிக்கு இணையானது சேவை என்ற தாரக மந்திரத்தை நாம் வாழ்க்கையாக கொண்டுள்ளோம். நமது கட்சித் தொண்டர்கள் இரண்டாவது அலையின் போது தேவைப்படுபவர்களுக்கு பயமின்றி உதவினார்கள். மற்றவர்கள் ட்விட்டரில் மட்டுமே சுறுசுறுப்பாக இருக்கிறார்கள்.  காங்கிரஸ் ஆட்சி காலத்தில்  எமர்ஜென்சியின் போது ஜெயபிரகாஷ் நாராயண் வீட்டிற்கு வெறுமனே வந்தால் கூட கைது செய்வார்கள். இந்த எமெர்ஜென்சி காலத்தில் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக நம் தலைமுறை செய்த தியாகங்களைப் பற்றி இன்றைய இளைஞர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.


அதே போல் லாலு பிரசாத்தின் ஆட்சியின் கீழ் இருந்த நாட்களையும் அவர்களுக்கு நினைவுபடுத்த வேண்டும். பீகார் மாநில மக்கள் சூரியன் மறைந்த பிறகு வெளியே வரவே பயந்தார்கள். லாலுவின் ஆட்சியின் கடத்தல் பணிகள் இடைவிடாமல் நடந்து கொன்டே இருந்தன. வேளாண் சட்டங்களில் உள்ள ஆட்சேபனைகள் குறித்து சுட்டிக்காட்டும்படி அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கேட்டபோது, போராட்டக்காரர்கள் எதையும் சுட்டிக்காட்டவில்லை. ஆனால் அவர்கள் ஒரு இயக்கம் ஆரம்பித்துள்ளனர். சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரின் முன்னேற்றத்திற்காக பிரதமர் மோடி அரசு செய்துள்ள பணிகள் பற்றி பொது மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். நமது இந்திய நாட்டில், பிரதமர் மோடி ஏற்படுத்தியுள்ள கொரோனா தடுப்பூசியை நாம் அனைவரும் செலுத்திக்கொண்டு கொரோனா வைரஸை இந்த நாட்டை விட்டு விரட்ட பாடு படுவோம்." என்று அவர் பேசினார்.

Tags:    

Similar News