நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரம்.. 5 லட்சம் மதிப்பிலான திட்டங்களை வழங்கிய மத்திய இணை அமைச்சர்..
ஈரோடு மாவட்டத்தில் நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் நிகழ்ச்சியில் மத்திய இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் பங்கேற்றார். ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அடுத்துள்ள உத்தாண்டியூரில் நடைபெற்ற நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரம் நிகழ்ச்சியில் மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத்துறை இணை அமைச்சர் டாக்டர் எல்.முருகன் கலந்து கொண்டார். அங்கு மத்திய அரசின் திட்டங்கள் குறித்து அமைக்கப்பட்டு இருந்த அரங்குகளை பார்வையிட்ட அவர், அங்கு விற்பனை செய்யப்படும் பொருட்களை வாங்கி டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தினார். தொடர்ந்து ரத்த அழுத்த பரிசோதனை மேற்கொண்டார்.
ட்ரோன் யூரியா தெளிக்கும் செயல்முறை விளக்க நிகழ்ச்சியை அமைச்சர் பார்வையிட்டார். முன்னதாக, ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணை பகுதியில் உள்ள பவானி ஆற்றில் பிரதம மந்திரியின் மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் எண்ணிக்கையிலான கட்லா, ரோகு, மிருகால், கல்பாசு மற்றும் சேல், கெண்டை போன்ற பல்வேறு வகையான மீன் குஞ்சுகளை ஆற்றில் விட்டு, நாட்டின மீன் குஞ்சுகள் இருப்பு செய்தல் பணிகளை மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல்.முருகன் தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து, 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான மருத்துவ காப்பீட்டு அட்டைகளை மீனவர்களுக்கு வழங்கினார். அதனைத் தொடர்ந்து மீனவர்களின் குறைகளை கேட்டு அறிந்த அவர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
Input & Image courtesy: News