காங்கிரஸ் எம்எல்ஏ விட்டில் கைப்பற்றப்பட்ட ரூ.5 கோடி ரொக்கம்! தங்க கட்டிகள்! மதுபானம்! இடி அதிரடி ரெய்டு!

Update: 2024-01-06 04:23 GMT

சண்டிகர் யமுனா நகர் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் மணல், ஜல்லி மற்றும் கிராவல் போன்றவற்றை ஹரியானாவின் காங்கிரஸ் எம்எல்ஏ சுரேந்தர் பன்வர், இந்திய தேசிய லோக் தளம் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ தில்பாக் சிங் மற்றும் இவ்விருவருக்கும் நெருக்கமானவர்கள் மீதும் சட்டவிரோத சுரங்கம் குறித்த வழக்கை ஹரியானா போலீசார் பதிவு செய்தனர். இதனை அடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் 2013ல் இந்த விவகாரத்தை கையில் எடுத்து சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் இந்த வழக்கை பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது. 

இவ்விசாரணையின் அடுத்த கட்ட நடவடிக்கையாக அமலாக்கத்துறை நேற்று இவ்வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள காங்கிரஸ் எம்எல்ஏ சுரேந்தர் பன்வர் மற்றும் தில்பாக் சிங் தொடர்புடைய பல இடங்களில் சோதனை நடத்தியது. இந்த சோதனையின் முடிவில், 5 கோடி ரூபாய் ரொக்கமும் நான்கு முதல் ஐந்து கிலோ தங்க பிஸ்கட்களையும் பறிமுதல் செய்தது அமலாக்கத்துறை மேலும் சட்டவிரோதமாக வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட ஆயுதங்கள், 100 மது பாட்டில்கள், 300 கேட்ரிட்ஜ்கள் போன்றவற்றை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

Source : Dinamalar 

Similar News