உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அக்னி-5 ஏவுகணை.. சோதனை வெற்றி.. பிரதமர் பாராட்டு..

Update: 2024-03-12 05:36 GMT

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஆன மத்திய அரசாங்கம் உள்நாட்டிலேயே தயாரிக்கும் பொருட்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. குறிப்பாக மேட் இன் இந்தியா என்ற திட்டத்தின் கீழ் பல்வேறு உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஏவுகணைகளின் சோதனைகளில் பெரும்பாலான வெற்றியை தான் இந்தியா அடைந்து இருக்கிறது. அந்த வகையில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அக்னி 5 ஏவுகணையின் சோதனையானது சிறப்பான முறையில் நடந்து முடிந்து இருக்கிறது.


உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அக்னி-5 ஏவுகணையின் முதல் சோதனையான மிஷன் திவ்யஸ் திராவுக்கு பிரதமர் பாராட்டு. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அக்னி-5 ஏவுகணையின் முதல் சோதனையான மிஷன் திவ்யஸ்திராவிற்காக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன விஞ்ஞானிகளுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.


சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது: "மிஷன் திவ்யஸ்திராவிற்காக நமது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன விஞ்ஞானிகளை நினைத்து பெருமிதம் கொள்கிறேன். இது பலமுறை தன்னிச்சையாக இலக்கு வைக்கக்கூடிய மறு நுழைவு வாகனம் (எம்ஐஆர்வி) தொழில்நுட்பத்துடன் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அக்னி -5 ஏவுகணையின் முதல் சோதனையாகும்." என கூறி பாராட்டினார். 

Input & Image courtesy: News

Tags:    

Similar News