ஜீன் 5 இல் நடக்கிறது அயோத்தி ராமர் கோவிலின் பிராணபிரதிஷ்டை விழா!

Update: 2025-06-02 16:14 GMT

கடந்தாண்டு அயோத்தி ராமர் கோவிலின் கட்டுமானம் நிறைவடைந்தது 2024 ஜனவரி 22 இல் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் குழந்தை ராமரின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது 

இதனை அடுத்து இரண்டாவது பிராண பிரதிஷ்டை விழா வருகின்ற ஜூன் 5ஆம் தேதி நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது அதற்கு முன்னதாக நாளை கர்ப்ப கிரகத்தின் மீது தங்க முலாம் பூசப்பட்ட குவிமாடம் நிறுவப்பட உள்ளது இந்த நிகழ்வு அயோத்தி ராமர் கோவிலில் கட்டுமானத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக கருதப்படுகிறது 

ராமர் சீதாதேவி மற்றும் லட்சுமணனின் சிலைகள் ஏற்கனவே அங்கு வந்து சேர்க்கப்பட்டுள்ள நிலையில் அவை கோவிலின் முதல் மாடியில் நிறுவப்பட உள்ளதாகவும் ஜூன் 5ஆம் தேதி கும்பாபிஷேகத்திற்கு பிறகு ஒரு வாரத்திற்குள் கோவிலின் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட பகுதிகள் பக்தர்களின் பார்வைக்கு திறக்கப்படும் எனவும் கூறப்படுகிறது 

Tags:    

Similar News