கடல் போல் காட்சியளிக்கும் டெல்டா மாவட்ட வயல்கள்! சேதம் அடைந்த நிலையில் 5 லட்சம் ஏக்கர் நெற்பயிர்கள்!

By :  G Pradeep
Update: 2025-11-26 08:57 GMT

திருவாரூர் கோட்டூர் ஒன்றியம் திருக்களார், புழுதுக்குடி, கோட்டூர் மற்றும் அக்கரைக்கோட்டகம் போன்ற கிராமங்களில் பெய்த கனத்த மழையால் பயிர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் இதனை பார்வையிடுவதற்காக தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் வந்திருந்தார். 

அப்போது காவேரி டெல்டாவில் நாகை, தஞ்சாவூர், மயிலாடுதுறை மற்றும் திருவாரூர் போன்ற மாவட்டங்களில் 10 லட்சம் ஏக்கர் அளவில் சம்பா, தாளடி போன்றவை சாகுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழை பெய்து வரும் சமயத்தில் கனமழை காரணமாக மேல்சம்பா, தாளடி பயிர்கள் நீரில் மூழ்கி நாசமடைந்தது.

 பொன்னுக்கு முன்டானாறு, சாளுவனாறு, வளவனாறு போன்ற ஆறுகளில் அதிக அளவில் ஆகாயத் தாமரை வளர்த்து கிடப்பதால் மழை நீர் வடியாமல் வயல் வலிகளில் தேங்கி கிடக்கின்ற நிலை ஏற்பட்டுள்ளதால் பயிர்கள் அழுகத் தொடங்கியது. 

அதனால் உடனடியாக தமிழக அரசு உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும், பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து ஏக்கருக்கு ரூ.35000 இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் வளர்ந்து கிடக்கும் ஆகாயத்தாமரை செடிகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News