வெள்ளம் பாதித்த 5 மாநிலங்களுக்கு ரூ.1,554 கோடி நிதி: மத்திய அரசு விடுவிப்பு!

Update: 2025-02-20 15:01 GMT

கடந்த 2024 ஆம் ஆண்டில் வெள்ளம், நிலச்சரிவு, புயல் போன்ற இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்ட 5 மாநிலங்க ளுக்கு தேசிய பேரிடர் நிவா ரண நிதியின்கீழ் ரூ.1,554.99 கோடி கூடுதல் நிதியை விடு விக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.


மொத்தம் 1,554.99 கோடியில் ஆந்திரத்துக்கு ரூ.608.08 கோடியும், திரிபுரா மாநிலத்துக்கு ரூ.288.93 கோ டியும், ஒடிஸாவுக்கு ரூ.255.24 கோடியும், தெலங்கானா வுக்கு ரூ.231.75 கோடியும், நாகாலாந்துக்கு ரூ.170.99 கோடியும் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்ட எக்ஸ் பதி வில், இயற்கை பேரிடர்க ளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரதமர் மோடி தலை மையிலான மத்திய அரசு எப் போதும் ஆதரவாகநிற்கிறது. அந்தவகையில், ஆந்திரம், நாகாலாந்து, ஒடிஸா, தெலங் கானா, திரிபுரா ஆகிய 5 மாநி லங்களுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியின்கீழ் ரூ.1,554.99 கோடியை ஒதுக்க உள்துறை அமைச்சகத்தின் உயர்நிலை குழு ஒப் புதல் அளித்துள்ளது' எனக் குறிப்பிட்டிருந்தார்.  

Tags:    

Similar News