சத்தீஸ்கர்: மலர்ந்த பா.ஜ.க ஆட்சி.. தானாக வந்து 5 பெண்கள் உட்பட 20 நக்சலைட்டுகள் போலீசில் சரண்..
சத்தீஸ்கர் மாநிலத்தில் 5 பெண்கள் உட்பட 20 நக்சல்கள் போலீசில் சரண் அடைந்து இருக்கிறார்கள். சத்தீஸ்கர் மாநிலத்தில் வனப்பகுதியில் வசித்துவந்த சிலர், நக்சல் கொள்கையில் ஈர்க்கப்பட்டு அவர்களுடன் தொடர்பில் இருந்தனர். மேலும் சிலர் தங்களை நக்சல் தீவிரவாத இயக்கத்தில் இணைத்துக் கொண்டனர். இந்த நிலையில் நக்சல் தடுப்பு பிரிவின் தொடர் முயற்சியால், நக்சல் அமைப்பில் இருந்த 5 பெண்கள் உட்பட 20 நக்சல்கள் போலீசில் சரணடைந்தனர்.
இது குறித்து சுக்மா எஸ்.பி. கிரண் சவான் கூறுகையில், சரணடைந்த 20 பேரும், நக்சல் சித்தாந்தங்களால் ஈர்க்கப்பட்டதாகவும், பின்னர் அவர்களின் தீவிரவாத, சட்டவிரோத செயல்களை பார்த்து வெறுப்பு அடைந்ததாகவும் கூறினர். போலீசில் சரணடைந்தவர்களில் மிலிட்டியாவின் நக்சல் துணைத் தளபதி உய்கா லக்மா, தண்டகாரண்ய ஆதிவாசி கிசான் மஸ்தூர் சங்கதன் உள்ளிட்டோர் சரணடைந்தனர். அரசின் விதிமுறைகளின்படி, சரணடைந்தவர்களுக்கு மறுவாழ்வு திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றார்.
சத்தீஸ்கரின் மிக மோசமான கிளர்ச்சியால் பாதிக்கப்பட்ட சுக்மா மாவட்டத்தில் ஐந்து பெண்கள் உட்பட 20 நக்சலைட்டுகள் சனிக்கிழமை சரணடைந்ததாக போலீசார் தெரிவித்தனர். சரணடைந்த நக்சலைட்டுகளில் ஒருவரான உய்கா லக்மா, ராணுவ துணைத் தளபதியாக செயல்பட்டார். அவர்கள் சரணடைந்ததில் மாவட்ட போலீஸ் பிரிவும், மத்திய ரிசர்வ் போலீஸ் படையும் முக்கியப் பங்காற்றியதாக சவான் மேலும் கூறினார். சரணடைந்த நக்சலைட்டுகளுக்கு மாநில அரசின் ‘சரணடைதல் மற்றும் மறுவாழ்வுக் கொள்கை’யின்படி வசதிகள் செய்து தரப்படும் என்றும் அவர் கூறினார்.
Input & Image courtesy: News