தீவிரவாதத்திற்கு தனி கவனம் செலுத்திய உள்துறை அமைச்சகம்:5 ஆண்டுகளில் 60 மாவட்டங்களில் குறைந்த இடதுசாரி தீவிரவாதம்!
இன்று டிசம்பர் 4 மாநிலங்களவையில் எழுந்த கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் தற்போது நாட்டில் 38 மாவட்டங்கள் இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளன கடந்த 5 ஆண்டுகளில் 60 மாவட்டங்கள் இடதுசாரி தீவிரவாதத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன என்பதை தெரிவித்தார்
அதாவது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஏழாவது அட்டவணையின்படி, காவல்துறை பொது ஒழுங்கு சம்பந்தப்பட்ட துறைகள் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ளன இருப்பினும் இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் முயற்சிகளுக்கு மத்திய அரசு உறுதுணையாக உள்ளது இடதுசாரி தீவிரவாத பிரச்சனையை முழுமையாக கையாள்வதற்காக, இடதுசாரி தீவிரவாதத்திற்கு தீர்வு காண்பதற்கான தேசிய கொள்கை செயல் திட்டம் 2015-ல் அங்கீகரிக்கப்பட்டது
இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு மத்திய ஆயுத போலீஸ் பட்டாலியன்கள் மாநில காவல் படைகளை நவீனப்படுத்துவதற்கான பயிற்சி ஆயுதங்கள் உபகரணங்கள் உளவுத் தகவல்களை பகிர்ந்து கொள்ளுதல் பலப்படுத்தப்பட்ட காவல் நிலையங்களை நிர்மாணித்தல் போன்றவற்றை மத்திய அரசு செய்து வருகிறது
அந்த வகையில் வளர்ச்சியைப் பொறுத்தவரை முன்னோடித் திட்டங்கள் தவிர இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் சாலைக் கட்டமைப்பை விரிவுபடுத்துதல் தொலைத்தொடர்பு இணைப்பை மேம்படுத்துதல் திறன் நிதி உள்ளடக்கம் ஆகியவற்றில் சிறப்பு திட்டங்களுடன் மத்திய அரசு பல்வேறு குறிப்பிட்ட முயற்சிகளை எடுத்துள்ளது
2019-20 முதல் 2023-24 வரையிலான கடந்த 05 ஆண்டுகளில் இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் சிறப்பு உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு ரூ.4350.78 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது அதுமட்டுமின்றி வளர்ச்சியைப் பொறுத்தவரை கீழ்க்கண்ட குறிப்பிட்ட முன்முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன
இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சாலைக் கட்டமைப்பை விரிவுபடுத்துவதற்காக இதுவரை 14,529 கிலோ மீட்டர் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன