பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு பெறும் இந்தியா:50 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயம்!
அவுரங்காபாத் நகரின் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் பாதுகாப்பு துறையில் 50 ஆயிரம் ரூபாய் கோடிக்கு ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்
அதாவது இந்தியாவை பாதுகாப்பு துறையில் தன்னிறைவு பெற செய்ய மத்திய அரசு உறுதிப்பூண்டுள்ளது அதற்காக பல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன அதன்படி கடந்த 2014 இல் பாதுகாப்பு துறையில் 600 கோடி ரூபாயாக இருந்த ஏற்றுமதி தற்போது 2024 இல் 24,000 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது
இதன் தொடர்ச்சியாக வருகின்ற 2029-30 இல் 50,000 கோடி ரூபாயாக ஏற்றுமதியை உயர்த்த மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது ரூபாய் ஒரு லட்சத்து 60 ஆயிரம் கோடியாக பாதுகாப்பு தளவாடங்கள் சார்ந்த உற்பத்தி மதிப்பு உள்ளது இதனையும் 3 லட்சம் கோடியாக அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்