ரூபாய் 500க்கு தாய்ப்பால் விற்பனை செய்த நிலையம்! அதிரடி காட்டிய உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள்!

Update: 2024-06-02 11:39 GMT

சமீபத்தில் தாய்ப்பால் வணிகரீதியில் விற்பனை செய்வதை உடனடியாக நிறுத்துமாறு தாய்ப்பால் வங்கிகளுக்கு உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. ஆனால் சென்னை மாதவரத்தில் 100 மில்லி தாய்ப்பாலை   500 ரூபாய்க்கு சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. 

அதாவது மனித மாண்பிற்கு அப்பாற்பட்டு பச்சிளம் குழந்தைகளுக்கான தாய்ப்பாலை வியாபாரத்திற்காக பயன்படுத்துவது சரியானது அல்ல என்ற வகையிலே மத்திய அரசு தாய்ப்பால் வணிக ரீதியில் விற்பனை செய்வதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அறிவிப்பு வெளியிட்டது. ஆனால் அதனை பொருட்படுத்தாமல் சென்னை மாதவரத்தில் அமைந்துள்ள லைஃப் வேக்ஸின் ஸ்டோர் என்கின்ற புரத பொருள் விற்பனை செய்யப்படும் நிலையத்தில் தாய்ப்பால் விற்பனை செய்யப்பட்டுள்ளது. 

இதனை அறிந்த திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில், பாட்டில்களில் தாய்ப்பால் விற்பனை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து உணவு பாதுகாப்புத் துறை சார்பில் அந்த விற்பனை நிலையத்தின் உரிமையாளர் முத்தையா மீது அளித்த புகாரின் அடிப்படையில் மாதவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். 

இதனை அடுத்து, எழும்பூர் தாய்சேய் நல மருத்துவமனை மற்றும் சில தனியார் மகப்பேறு மருத்துவமனைகளில் குழந்தை பெற்று சிகிச்சையில் இருந்தவர்களின் விவரங்களை சேகரித்து, அவர்களிடம் இருந்து 100 மில்லி தாய்ப்பாலை 200 ரூபாய்க்கு வாங்கி, தாய்ப்பால் கெட்டுப் போகாமல் இருப்பதற்காக சில ரசாயனங்களையும் அதில் கலந்து 100 மில்லி தாய்ப்பாலை 500 ரூபாய்க்கு முத்தையா விற்பனை செய்து வந்துள்ளது அம்பலமாகியுள்ளது. 

இதனை அடுத்து இந்த விற்பனை நிலையம் தாய்ப்பால் விற்பனையை தொடங்கியது எப்பொழுது? யார் யார் தாய்ப்பால் கொடுத்தவர்கள் அவர்களில் யாருகேனும் ஏதேனும் நோய் பாதிப்பு இருக்கிறதா? என்பது குறித்த விசாரணையை போலீசார் மேற்கொண்டுள்ளனர். மேலும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அந்த விற்பனை நிலையத்திற்கு சீல் வைத்தனர். 

Source : தினமணி 

Tags:    

Similar News