வேலைவாய்ப்பு திருவிழா: 51 ஆயிரம் பேருக்கு அரசு பணிக்கான நியமன ஆணையை வழங்கிய பிரதமர்!

Update: 2024-10-30 17:22 GMT

வேலைவாய்ப்புத் திருவிழாவில் உரையாற்றிய பிரதமர் திரு நரேந்திர மோடி, அரசுத் துறைகள் மற்றும் அமைப்புகளில் புதிதாக நியமனம் செய்யப்பட்ட 51000க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை காணொலிக் காட்சி மூலம் இன்று வழங்கினார். வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கு முன்னுரிமை அளிப்பதில் பிரதமரின் உறுதிப்பாட்டை வேலைவாய்ப்புத் திருவிழா எடுத்துரைக்கிறது. நாட்டை கட்டமைப்பதில் பங்களிக்க உரிய வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் இளைஞர்களுக்கு இது அதிகாரம் அளிக்கும்.

இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், தந்தேராஸ் பண்டிகையை முன்னிட்டு தனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்தார். இந்த ஆண்டு தீபாவளி சிறப்பு வாய்ந்ததாக இருக்கும் என்பதை சுட்டிக்காட்டிய பிரதமர் 500 ஆண்டுகளுக்குப் பிறகு அயோத்தியில் உள்ள தனது அற்புதமான கோவிலில் ஸ்ரீ ராமர் அமர்ந்த பின்னர் இது முதல் தீபாவளி என்று கூறினார். பல தலைமுறையினர் இந்த தீபாவளிக்காக காத்திருப்பதாகவும், பலர் அதற்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்துள்ளனர் அல்லது துன்பங்களை எதிர்கொண்டுள்ளனர். தற்போதைய தலைமுறையினர் இத்தகைய கொண்டாட்டங்களைக் காண்பதற்கும், அதில் பங்கேற்பதற்கும் மிகவும் அதிர்ஷ்டசாலிகள் என்று பிரதமர் குறிப்பிட்டார். பண்டிகை காலத்தில், 51,000 இளைஞர்களுக்கு அரசு பணிக்கான பணி நியமனக் கடிதங்கள் வழங்கப்படுவதாக பிரதமர் கூறினார். புதிதாக பணியில் சேர்ந்தவர்களுக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார்.

லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு நிரந்தர அரசுப் பணிகள் வழங்குவது என்பது பாரம்பரியமாக உள்ளதாகவும், அது தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். பிஜேபி மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களில் கூட லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு பணி நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன. புதிதாக அமைக்கப்பட்ட அரசின் மூலம் 26,000 இளைஞர்கள் வேலைவாய்ப்பைப் பெற்றுள்ள ஹரியானாவில் கொண்டாட்டமான சூழல் நிலவுகிறது என்று மோடி கூறினார். எந்தச் செலவோ அல்லது சிபாரிசோ இல்லாமல் வேலை வழங்குவதில் ஹரியானாவில் உள்ள தங்கள் அரசு தனக்கான அடையாளத்தை உருவாக்கி உள்ளது என்று மோடி கூறினார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News