இரண்டரை மாதங்கள் ஆகியும் வெள்ள நிவாரணம் கிடைக்காமல் அதிருப்தி! 5.5 லட்ச குடும்பங்கள் ஏமாற்றம்!

Update: 2024-02-23 14:02 GMT

கடந்த வருடம் டிசம்பர் மாத தொடக்கத்தில் சென்னையை கடந்து சென்ற மிக்ஜம் புயலால் சென்னை முழுவதும் கனத்த மழை பெய்தது. மழைநீர் அனைத்தும் வெள்ளப்பெருக்காக நகருக்குள் புகுந்து! மக்கள் வசிக்கும் குடியிருப்புகளுக்குள்ளும் தேங்கி அத்தியாவசிய பொருட்கள் குடிநீர் நிவாரண பொருட்கள் என எதுவும் இன்றி மக்கள் திண்டாடினர். இதில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டு தங்களை காப்பாற்றுவதற்கு கூட மற்றவர்களை மக்களால் அழைக்க முடியாத நிலை ஏற்பட்டது. 

இந்த வெள்ளை பாதிப்புகளுக்கு சாதாரண மக்கள் மட்டுமின்றி முக்கிய பிரபலங்களும் சினிமா நட்சத்திரங்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டதும் செய்திகளில் வெளியானது அவர்களை மீட்பதற்கும் தனிப்படை சென்றதும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இந்த மழை பாதிப்பு மக்களை மிகவும் அதிருப்தியில் தள்ளியது ஏனென்றால் மலைக்கு முன்பு வடிகால் பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டது மழைநீர் தேங்காது என்று கூறிய திமுக அமைச்சர்கள் மழை பெய்து மழைநீர் அனைத்தும் தெருக்களில் தேங்கி வீடுகளில் புகுந்த பிறகு வடிகால் நடவடிக்கைகள் முழுவதுமாக முடிக்கப்படவில்லை என்று கூறினர்! 

இதனை அடுத்து மழை நின்ற பிறகு சென்னையில் மழையால் பாதித்த அனைத்து குடும்பங்களுக்கும் தலா ஆயிரம் ரூபாய் வழங்குவதாக தமிழக அரசு அறிவித்தது. இதனால் மக்கள் நெடு நேரமாக வரிசையில் நின்று தங்களது நிவாரணத் தொகையைப் பெற்றுச் சென்றனர், இருப்பினும் இதில் நீண்ட நேரமாக வரிசைகள் நின்று நிவாரணத் தொகையை பெற சென்றாலும் பலரது கைரேகைகள் ஒத்துப் போகாததால் அவர்களுக்கு நிவாரணத் தொகை வழங்கப்படாமல் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். 

இதற்கும் மக்கள் மத்தியில் கண்டனங்கள் எழுந்ததால் ரேஷன் கார்டு இல்லாததால் வெள்ள நிவாரணத் தொகை இதுவரை பெறாத குடும்பங்களிடமிருந்து அரசு மீண்டும் நிவாரணத் தொகைகான விண்ணப்பத்தை வாங்கியது. ஆனால் இந்த விண்ணப்பம் பெறப்பட்டு இரண்டரை மாதங்கள் கடந்தும் அதற்கான அறிவிப்புகள் எதுவும் இதுவரை வெளியாகாதது பலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது, கிட்டத்தட்ட 5.5 லட்சம் குடும்பங்கள் ஏமாற்றத்தில் உள்ளனர். 

Source : Dinamalar 

Similar News