உலகின் மிகப்பெரிய சுரங்கப்பாதை! ரூ. 55,600 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர்!

Update: 2024-03-09 10:48 GMT

பிரதமர் நரேந்திர மோடி அருணாச்சலப் பிரதேசம் சென்ற நிலையில் அம்மாநிலத்தின் சேலா கணவாய் வழியாக தவான் பகுதியை இணைக்கும் சுரங்கப் பாதையை திறந்து வைத்தார். இந்த சுரங்கப் பாதைக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். அதற்கு பிறகு இந்த சுரங்கப்பாதைக்கு ரூபாய் 825 கோடி செலவிடப்பட்டு கட்டி முடிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சுரங்கப்பாதை உலகின் மிகப்பெரிய சுரங்கப் பாதை என்றும் கூறப்படுகிறது. 

இதனைத் தொடர்ந்து பத்தாயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களையும் தொடங்கி வைத்த பிரதமர் மணிப்பூர், மேகாலயா, நாகலாந்து, சிக்கிம், திரிபுரா மற்றும் அருணாச்சல பிரதேச மாநிலங்களில் முடிவடைந்த 55 ஆயிரத்து 600 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார்.


அதற்குப் பிறகு பிரதமர் நரேந்திர மோடி அவ்விழாவில், வடகிழக்கு மாநிலங்கள் வளர்ச்சி அடைவது எங்களின் கொள்கை ஏனென்றால் இதன் மூலம் நமது வட கிழக்கு மாநிலங்கள், தெற்கு ஆசிய மற்றும் கிழக்கு ஆசியாவுடன் வர்த்தகம் மற்றும் வாணிப இணைப்பை உறுதிப்படுத்தும்! கடந்த ஐந்து ஆண்டுகளில் வடகிழக்கு மாநிலங்களில் நாங்கள் செய்த பணிகளை காங்கிரஸ் செய்வதற்கு 20 ஆண்டுகள் எடுத்துக் கொள்ளும் என்று பேசினார். 

Source : Dinamalar  

Similar News