மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு மத்திய அரசு ரூ.580 கோடி நிதி ஒதுக்கீடு!
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அரசு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு ரூ.580 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது இது தமிழக கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முக்கிய நடவடிக்கை என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்
மேலும் தற்போதைய நிதியாண்டில் இந்தத் திட்டத்தின் செயல்திறனை மேம்படுத்த நிர்வாக அவசரத் தேவைகளுக்காக ரூ.75.53 கோடி கூடுதல் நிதியையும் வழங்கியுள்ளது
தமிழகத்தின் வளர்ச்சிக்காவும் கிராமப்புற மக்களின் நலனுக்காகவும் தொடர்ந்து உறுதுணையாக செயல்படும் மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் இந்த அக்கறைக்கும் அர்ப்பணிப்பிற்கும் தமிழக மக்களின் சார்பாக உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்