தலை தூக்கும் போதைப்பொருள் கலாச்சாரம்.. 6 இளைஞர்களை கைது செய்த கோவை போலீசார்..

Update: 2024-06-10 13:57 GMT

102 கிராம் மெத்தாம் பெட்டமைன் பவுடர் மற்றும் 1.2 கிலோ கஞ்சா வைத்திருந்த 6 இளைஞர்களை கோவை போலீசார் கைது செய்து மூன்று வாரங்களுக்குப் பிறகு, அக்ரஹாராவில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் உகாண்டா நாட்டைச் சேர்ந்த ஐவன் கபோங்கே என்பவரை விசாரணை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். பெங்களூரில் விசாரணைக் குழுவால் முன்னர் கைது செய்யப்பட்ட கென்யா பெண்ணின் கூட்டாளியாகக் கூறப்படும் கபோங்கே, வாட்ஸ்அப் குழுக்கள் மூலம் நாடு தழுவிய போதைப்பொருள் வலையமைப்பைத் திட்டமிடுவதாக நம்பப்படுகிறது.

மேலும் இப்படி வாட்ஸ் அப் குழுக்கள் மூலம் போதைப் பொருளை விற்பனை செய்வதாக தகவல் கிடைத்ததன் பேரில் காபோங்கை விசாரணைக்காக காவலில் வைக்குமாறு, கர்நாடக அரசிடம் கோயம்புத்தூர் காவல்துறை ஆலோசனை வழங்கி இருப்பதாக சில தகவல்கள் கூறுகிறது. கைது செய்யப்பட்ட ஆறு நபர்களின் வாக்குமூலங்களைத் தொடர்ந்து, கோயம்புத்தூர் காவல்துறையினர் வினோத்தை கைது செய்தனர். அவர் பெங்களூருவைச் சேர்ந்த கால் டாக்சி டிரைவர் பிரவீன் குமாரிடம் இருந்து போதைப்பொருளைப் பெற்றதாக ஒப்புக்கொண்டார்.


பிரவீன் வாட்ஸ்அப் குரூப் மூலம் போதைப்பொருட்களை பெற்று, UPI பேமெண்ட் மூலம் பரிவர்த்தனைகளை எளிதாக்கியது தெரியவந்தது. மேலும் விசாரணையின் போது போதைப்பொருட்கள், கல்லூரி மாணவர்களுக்கு பெரும்பாலும் விநியோகிக்கப்பட்டது தெரியவந்து இருக்கிறது. இவர்களுடைய இந்த போதைப்பொருள் வியாபாரம் கடந்த டிசம்பர் 2023 முதல் மே 2024 வரை மொத்தம் ₹45 லட்சம் பரிவர்த்தனைகள் பதிவு செய்யப் பட்டுள்ளன. வினோத், பிரவீன் ஆகியோரை போலீஸார் நீதிமன்றக் காவலில் வைத்து இருக்கிறார்கள்.

Input & Image courtesy: The commune

Tags:    

Similar News