மோடி அரசின் அசத்தல் ஆட்சியில் 6 கோடி முதியவர்கள் பயன்பெறும் வகையில் இலவச மருத்துவ காப்பீடு!
ஆறு கோடி பேர் பயன் பெறும் வகையில் 70 வயதைக் கடந்த அனைவருக்கும் இலவச மருத்துவ காப்பீடு வழங்க மத்திய மந்திரி சபை ஒப்புதல் அளித்துள்ளது.
70 வயதைக் கடந்த மூத்த குடிமக்கள் அனைவருக்கும் மருத்துவ காப்பீடு வழங்கி இலவச சிகிச்சை அளிக்கப்படும் என்று மத்திய அரசு ஏற்கனவே அறிவித்து இருந்தது .இந்த நிலையில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரி சபை டெல்லியில் நேற்று கூடியது .இந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன .இதை அடுத்து அந்த முடிவுகள் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைவருக்கும் ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டத்தின் கீழ் வருமானத்தைப் பொருட்படுத்தாமல் இலவச மருத்துவ காப்பீடு வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதன் மூலம் 6 கோடி மூத்த குடிமக்களை கொண்ட சுமார் 4.5 கோடி குடும்பங்கள் பயன் அடையும். இந்த திட்டத்தின் படி குடும்ப அடிப்படையில் ஐந்து இலட்சத்துடன் இலவச மருத்துவ காப்பீடு வழங்கப்படும் .இதற்கு தகுதியுள்ள மூத்த குடிமக்களுக்கு புதிய தனித்துவமான அட்டை வழங்கப்படும். ஏற்கனவே ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டத்தின் கீழ் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய மூத்த குடிமக்கள் தங்களுக்கு ஆண்டுக்கு ரூபாய் 5 லட்சம் வரை கூடுதல் டாப்-அப் காப்பீட்டை பெறுவார்கள்.
தனியார் மருத்துவக் காப்பிட்டுக் கொள்கைகள் அல்லது ஊழியர்களின் மாநிலக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் உள்ள 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் இந்த திட்டத்தின் கீழ் பலன்களைப் பெற தகுதியுடையவர்கள் என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. மேலும் ₹ 12,461 கோடி செலவில் நீர்மின் திட்டங்களுக்கான மின்துறை அமைச்சகத்தின் முன்மொழிவுக்கும் கனரக தொழில்துறை அமைச்சகத்தின் பத்தாயிரம் கோடிலான முன்மொழிவுக்கும் 62,500 கோடி மதிப்பிலான சாலைப் பணிகளுக்கும் தீவிர வானிலை நிகழ்வுகள் மற்றும் காலநிலை மாற்றத்தின் தாக்கங்களை கணித்து பதில் அளிக்கும் இந்தியாவின் திறனை மேம்படுத்தும் 'மிஷன் மவுஸம்' திட்டத்துக்கும் மத்திய மந்திரி சபை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.