சபரிமலை சுவாமி கோவில் தங்கம் திருட்டு வழக்கில் இப்படிப்பட்ட 6வது நபர்! விசாரணையில் வெளிவந்த உண்மை!
சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில் கருவறை முன் உள்ள துவாரபாலகர்கள் சிலைகளின் தங்க கவசம் மற்றும் திருநடையில் பதிக்கப்பட்ட தங்கத்தை மோசடி செய்து கொள்ளையடிக்கப்பட்டது குறித்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இது சம்பந்தமாக ஐகோர்ட் நியமித்த சிறப்பு விசாரணை குழு 2 வழக்குகள் பதிவுசெய்து, உபயதாரர் என அறியப்படும் உன்னிகிருஷ்ணன் போற்றி கைதுசெய்யப்பட்டார்.
அதைத் தொடர்ந்து சபரிமலை முன்னாள் அட்மினிஸ்டேட்டிவ் ஆபீசர் முராரி பாபு, சபரிமலை முன்னாள் எக்ஸ்கியூட்டிவ் ஆப்பீசர் சுதீஸ், திருவாபரணம் கமிஷனர் கே.எஸ்.பைஜூ மற்றும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு முன்னாள் ஆணையரும், தேவசம்போர்டு முன்னாள் தலைவருமான என்.வாசு போன்றோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் முன்னாள் தலைவர் ஏ.பத்மகுமாருக்கு தொடர்பு இருப்பதாக கிடைத்த தகவலின் படி சிறப்பு புலனாய்வு குழு மூன்று முறை ஆஜராகும் படி நோட்டீஸ் அனுப்பியும் அவர் ராஜராகாமல் காலம் தாழ்த்தி வந்தார்.
இந்நிலையில் தற்பொழுது நேரில் ஆஜராகிய அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதில் கடந்த 2019 ஆம் ஆண்டு பதவியில் இருந்த பொழுது தங்கம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்து விசாரணை குழுவினரால் கைது செய்யப்பட்டார். இந்த குற்றம் சாட்டப்பட்டவர்களின் வரிசையில் உன்னி பத்மகுமாருக்கு தொழில் ரீதியாக தொடர்பு இருப்பதாக தெரியவந்துள்ளது.
இவர் கேரளாவின் ஆளுங்கட்சியில் உறுப்பினராக உள்ள நிலையில் உள்ளாட்சித் தேர்தல் டிசம்பர் 9 மற்றும் 11ம் தேதிகளில் நடக்க இருக்கும் நிலையில் இந்தக் கொள்ளை வழக்கை எதிர்க்கட்சியான பாஜக மற்றும் காங்கிரஸ் மத்தியில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. சபரிமலை ஐயப்ப சுவாமி கோவில் தங்கம் கொள்ளை வழக்கில் இதோடு ஆறு பேர் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.