ஜவுளி ஏற்றுமதியில் உலகில் 6 இடத்தில் இருக்கும் இந்தியா:ரூபாய் 9 லட்சம் கோடிக்கு ஏற்றுமதி செய்ய புதிய இலக்கு!
120 நாடுகள் பங்கேற்ற டெல்லி பாரத் மண்டபத்தில் ஜவுளி தொடர்பான பாரத் 2025 கண்காட்சி கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி தொடங்கியது இந்த கண்காட்சி வருகின்ற பிப்ரவரி 15ஆம் தேதி வரை நடைபெற உள்ளது
அந்த கண்காட்சியை இன்று பார்வையிட்ட பிரதமர் நரேந்திர மோடி 120 நாடுகளின் கலாச்சாரத்தை இங்கு வரும் தொழில் முனைவோர் அறிந்து கொள்கிறார்கள் 2025 ஆம் ஆண்டின் பொது பட்ஜெட்டில் பருத்தியின் உற்பத்தியை அதிகப்படுத்துவதற்காக அதிலும் குறிப்பாக நீண்ட இழை பருத்தி ரகத்தின் உற்பத்தியை அதிகரிக்கவே ஐந்தாண்டு பருத்தி இயக்கம் அறிவிக்கப்பட்டது அதுமட்டுமின்றி தேசிய பாரதி தொழில்நுட்ப இயக்கத்திற்கு 500 ரூபாய் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது
அதன் வெளிப்பாடாக ஜவுளி ஏற்றுமதியில் தற்போது நம் நாடு உலகின் ஆறாம் இடத்தில் உள்ளது மொத்தமாக மூன்று லட்சம் கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி செய்கிறோம் இதனை மும்மடங்காக உயர்த்தி ஒன்பது லட்சம் கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது இந்த இலக்கை நான் 2030ம் ஆண்டிற்கு முன்பாகவே எட்டுவோம் எனவும் நம்புகிறேன் என்று பேசியுள்ளார்