வாரணாசியில் 6100 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி!

தனது சொந்த தொகுதியான வாரணாசி சென்ற பிரதமர் மோடி அங்கு ₹6,100 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் .

Update: 2024-10-21 15:27 GMT

உத்தர பிரதேசத்தின் வாரணாசி நகருக்கு பிரதமர் மோடி நேற்று பயணம் மேற்கொண்டார். 6100 கோடி மதிப்பிலான திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார். நேற்று இரண்டு மணி அளவில் ஆர்.ஜே சங்கரா கண் மருத்துவமனையையும் அவர் தொடங்கி வைத்தார் .இதன் பின்னர் மாலை 4:15 மணியளவில் வாரணாசி நகரில் பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கான அடி கல்லை அவர் நாட்டினார் .

ஆக்ரா விமான நிலையத்தில் ரூபாய் 570 கோடி மதிப்பில் ,தர்பங்கா விமான நிலையத்தில் ரூபாய் 910 கோடி மதிப்பில், பக்தோக்ரா விமான நிலையத்தில் ரூபாய் 150 கோடி மதிப்பில் குடிமக்களுக்கான புதிய பகுதிக்கான அடிக்கல்லையும் அவர் நாட்டினார். ரேவா விமான நிலையம், மா மகாமாயா விமான நிலையம், அம்பிகாபூர் மற்றும் சர்சவா விமான நிலையம் ஆகியவற்றில் புதிய முனைய கட்டிடங்களையும் அவர் ரூபாய் 220 கோடி மதிப்பில் திறந்து வைத்தார். விளையாட்டுக்கு உயர்தர உள்கட்டமைப்பை வழங்கும் நோக்குடன் ரூபாய் 210 கோடி மதிப்பில் வாரணாசி விளையாட்டு வணிகத்தின் இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்ட மறு வளர்ச்சிக்கான திட்டங்களையும் அவர் தொடங்கி வைத்தார்.

Tags:    

Similar News