இந்திய அந்நியச் செலாவணி கையிருப்பு: ரூ. 65,396 கோடி டாலராக உயர்வு!

Update: 2025-03-16 17:19 GMT
இந்திய அந்நியச் செலாவணி கையிருப்பு: ரூ. 65,396 கோடி டாலராக உயர்வு!

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த 7-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 65,396 கோடி டாலராக உயர்ந்தது. இது குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்ட புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:மார்ச் 7-ஆம் தேதியுடன் நிறைவ டைந்த வாரத்தில் நாட்டின் அந்நியச் S செலாவணி கையிருப்பு 1,526 கோடி டாலர் உயர்ந்து 65.396 கோடி டாலராக உள்ளது.


பிப். 28-ஆம் தேதியுடன் நிறைவடைந்த முந்தைய வாரத்தில் அது 178.1 கோடி டாலர் குறைந்து 63,869.8 கோடி டாலராக இருந்தது. கடந்த ஆண்டு செப். 27-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத் தில் அந்நியச் செலாவணி கையிருப்பு 70,488.5 கோடி டாலர் என்ற புதிய உச்சத்தைத் தொட்டிருந்தது. அது தொடர்ந்து அதிக ரித்து வந்தாலும், உலகளாவிய பொருளாதாரச் சூழல்களால் ஏற்ப டும் அழுத்தங்களுக்கு இடையே ரூபாய் மதிப்பைப் பாதுகாப்பதற் காக அந்நியச் செலாவணியை ரிசர்வ் வங்கி பயன்படுத்துவதால் அதன் கையிருப்பு அவ்வப்போது குறைந்துவந்தது.

கடந்த மார்ச் 7-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், அந்நியச் செலாவணி கையிருப்பின் முக்கிய அங்கமான அந்நிய நாணய சொத்துகள் 1,399.3 கோடி டாலர் அதிகரித்து 55,728.2 கோடி டாலராக உள்ளது.

Similar News