இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கத்தின் முயற்சியின் காரணமாக ஜூலை மற்றும் செப்டம்பர் காலாண்டிற்கான வேலையின்மை விகிதமானது 6.6 சதவீதமாக குறைந்து இருக்கிறது. குறிப்பாக வேலை பெரும் இளைஞர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சுயமாக தொழில் தொடங்கும் இளைஞர்களுக்கும் பல்வேறு வாய்ப்புகளை உருவாக்கும் விதமாக ஸ்டார்ட் அப் களையும் மற்றும் அதற்கான கடன்களையும் வங்கிகள் மூலமாக மத்திய அரசு வழங்கி வருகிறது.
ஜூலை-செப்டம்பர் காலாண்டில் இந்தியாவின் நகர்ப்புற வேலையின்மை விகிதம் 6.6 சதவீதமாகக் குறைகிறது. தேசிய மாதிரி ஆய்வு அமைப்பின் (NSSO) சமீபத்திய தரவு, இந்தியாவில் 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய தனிநபர்களுக்கான நகர்ப்புற வேலையின்மை விகிதங்களில் நேர்மறையான போக்கை வெளிப்படுத்துகிறது. 20வது காலகட்ட தொழிலாளர் படைக் கணக்கெடுப்பின்படி, செப்டம்பர் காலாண்டில் வேலையின்மை விகிதம் 6.6 சதவீதமாகக் குறைந்துள்ளது, இது முந்தைய ஆண்டின் இதே காலக்கட்டத்தில் 7.2 சதவீதத்திலிருந்து சரிவைக் குறிக்கிறது என்று தெரிவித்துள்ளது.
கொரோனா நோய் தொற்றுக்குப் பிறகு வேலைவாய்ப்பு பெறும் இளைஞர்களின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்து வந்தது. ஆனால் தற்பொழுது வேலை இல்லாத நிலைமை சிறிது சிறிதாக குறைந்து இருக்கிறது. குறிப்பாக செப்டம்பர் காலண்டில் வேலையின்மை என்ற விகிதம் 6.6 சதவீதமாக குறைந்தும் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
Input & Image courtesy: News