உலக நாடுகளுடன் உறவை மேம்படுத்த மோடியின் இத்தாலி பயணம் - ஜி 7 மாநாட்டில் பங்கேற்பு!
மோடி மூன்றாவது முறையாக பதவியேற்ற பிறகு முதல் முறையாக ஜி- 7மாநாட்டில் பங்கேற்க இத்தாலி செல்கிறார்.
பிரதமராக பதவியேற்ற ஒரே வாரத்தில் வெளிநாட்டு பயணத்தை தொடங்குகிறார் மோடி. ஜி-7 மாநாட்டில் பங்கேற்க அவர் இன்று இத்தாலிக்கு புறப்பட்டு செல்கிறார். அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, கனடா மற்றும் ஜப்பான் ஆகியவை இணைந்து அமைத்துள்ள ஜி7 அமைப்பின் உச்சி மாநாடு இத்தாலியின் அபுலியாவில் உள்ள போர்கோ எக்லாசியாவில் இன்று தொடங்கி வரும் 15-ஆம் தேதி வரை நடக்க உள்ளது.
இம்முறை ஜி-7 அமைப்பின் தலைவராக உள்ள இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியின் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி இன்று அந்நாட்டிற்கு செல்கிறார். மூன்றாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்று பிறகு மோடி செல்லும் முதல் வெளிநாட்டு பயணம் இது .மோடியுடன் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், உயர் அதிகாரிகள் செல்கின்றனர். மோடி ,இத்தாலி பிரதமர் மேலும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உள்ளிட்ட பல உலக தலைவர்களை சந்தித்து பேச உள்ளார். பயணத்தை முடித்துக் கொண்டு நாளை இரவு பிரதமர் மோடி டெல்லி திரும்புவார்.
SOURCE :Newspaper