பிரதமரின் பயணங்கள்:ஜி7 பேச்சுவார்த்தைகள்,பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் வர்த்தக உறவுகள் என முக்கிய நிகழ்ச்சி நிரல்கள்!

Update: 2025-06-15 15:27 GMT

பிரதமர் நரேந்திர மோடி இன்று ஜூன் 15 சைப்ரஸ் குடியரசு, கனடா மற்றும் குரோஷியா ஆகிய மூன்று நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார் அதன்படி பிரதமர் மோடியின் முதல் பயணம் சைப்ரஸ் குடியரசு ஆகும் அங்கு அவர் அதிபர் நிகோஸ் கிறிஸ்டோடௌலிடெஸின் அழைப்பின் பேரில் சென்றுள்ளார் 


தனது புறப்படும் அறிக்கையில் பிரதமர் மோடி சைப்ரஸை மத்தியதரைக் கடல் பகுதி மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் நெருங்கிய நண்பர் மற்றும் முக்கியமான கூட்டாளி என்று குறிப்பிட்டுள்ளார் மேலும் இந்தப் பயணம் வரலாற்றுப் பிணைப்புகளை மேலும் வலுப்படுத்தவும் வர்த்தகம்,முதலீடு,பாதுகாப்பு,தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் நமது உறவுகளை விரிவுபடுத்தவும் மக்களிடையேயான பரிமாற்றங்களை மேம்படுத்தவும் ஒரு வாய்ப்பை வழங்குகிறது என்று கூறியுள்ளார் 

கனேடிய பிரதமர் மார்க் கார்னியின் அழைப்பின் பேரில் ஜி 7 உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி சைப்ரஸிலிருந்து கனடாவின் கனனாஸ்கிஸுக்குச் செல்ல உள்ளார் கனடா பயணத்தை முடித்த பிறகு பிரதமர் மோடி குரோஷியாவுக்குச் சென்று அங்கு அவர் ஜனாதிபதி ஜோரன் மிலானோவிக் மற்றும் பிரதமர் ஆண்ட்ரேஜ் பிளென்கோவிக் ஆகியோரைச் சந்திப்பார் இது குரோஷியாவிற்கு ஒரு இந்தியப் பிரதமரின் முதல் வருகையாக இருக்கும்

Tags:    

Similar News