மகன் பிறக்காத ஆத்திரம்: 7 நாளே ஆன பெண் குழந்தையை சுட்டுக் கொன்ற பாகிஸ்தானி: மகளிர் தினத்தில் நடந்த கொடூரம்!

Update: 2022-03-09 06:04 GMT

சர்வதேச மகளிர் தினம் நேற்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. பெண்மைமை மதித்து அவர்களை போற்றும் விதமாக கொண்டாடப்பட்ட இந்த நள்ள நாளில் நேற்று பாகிஸ்தானில் ஒரு துயரமான சம்பவம் நடைபெற்றுள்ளது. பிறந்து 7 நாட்களே ஆன மகளை ஒரு தந்தை சுட்டுக்கொன்றுள்ளார். இது பற்றிய உண்மை தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.


பாகிஸ்தான், பஞ்சாப் மாகாணம் மியான்வாலி நகரில்தான் இந்த கொடுமை நடைபெற்றுள்ளது. பிரதமர் இம்ரான்கானின் சொந்த ஊர்தான் மியான்வாலி ஆகும். இந்நிலையில், மியான்வாலியை சேர்ந்தவர் ஷாஷ்சாயிப்கான், பாத்திமா என்ற தம்பதிகளுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு கடந்த வாரம் அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.

ஆனால் தனக்கு ஆண் குழந்தை பிறக்கவில்லையே என்று ஷாஷ்சாயிப்கான் ஆத்திரம் அடைந்து அந்த பெண் குழந்தையை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுள்ளார். பச்சிளம் குழந்தையை சுட்டுக்கொன்றுள்ள சம்பவம் உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது பற்றி சாயிப்கான் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதுவும் உலகம் முழுவதும் மகளிர் தினம் கொண்டாடப்பட்ட நாளே ஒரு பெண் குழந்தையை தந்தையே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Source: Daily Thanthi

Image Courtesy: NCR News

Tags:    

Similar News