டிஜிட்டல் சேவைகளில் கலக்கும் இந்தியா.. 7 உலக நாடுகளில் செயல்பாட்டில் இருக்கும் இந்திய UPI..

Update: 2024-04-09 14:51 GMT

இந்தியா தற்போது உலக நாடுகளுக்கு மத்தியில் மிகவும் பயங்கரமாக வளர்ந்து கொண்டு வரும் நாடாக பார்க்கப்படுகிறது. அதிலும் உலக நாடுகளில் இந்தியாவிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய நிறைய விஷயங்கள் இருப்பதாக அவ்வப்பொழுது உலக தலைவர்கள் அனைவரும் கூறி வருகிறார்கள். அந்த வகையில் டிஜிட்டல் சேவைகளில் இந்தியா தற்போது புதிய ஒரு அங்கீகாரத்தை எடுத்து இருக்கிறது. இந்தியாவிற்கு வெளியே தற்போது ஏழு நாடுகளில் இந்தியாவின் UPI சேவையானது தற்போது கிடைக்கிறது.


மத்திய அரசாங்கம் டிஜிட்டல் இந்தியா என்ற பிரச்சாரத்தின் மூலமாக டிஜிட்டல் கட்டண சேவைகள் மற்றும் பரிமாற்றங்கள் பெருமளவில் மக்களிடையே புகழ்பெற்று விளங்கி வருவது அனைவரும் நன்கு அறிந்ததே! அந்த வகையில் தற்போது ஏழு உலக நாடுகளில் இந்தியாவின் இந்த ஒரு சேவை அங்கீகரிக்கப்பட்டு இருப்பது இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் விதமாக அமைந்து இருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் இதற்கு பின்னணியில் பல்வேறு முயற்சிகளை எடுத்திருப்பது தாங்கள் அறிந்த ஒன்று.


மற்ற உலக நாடுகளுடன் நல்லுறவை இந்தியா வைத்திருப்பதன் பின்னணியை தற்போது இந்தியாவின் உடைய UPI-யை பரிமாற்றங்களை மற்ற உலக நாடுகள் அங்கீகரித்து இருப்பதற்கு முக்கிய காரணம். அதுமட்டுமில்லாமல் இது சுற்றுலா துறையும் விரிவாக்கம் செய்வதற்கு ஒரு நல்ல வாய்ப்பாக கருதப்படுகிறது. ஏழு உலக நாடுகளில் முதல் முதலாக பூட்டான் மற்றும் சிங்கப்பூர் யுபிஎஸ் சேவையை முதலில் அறிமுகப் படுத்தியது. தற்போது இந்த ஒரு சேவையானது மேலும் விரிவடைந்து, நேபாளம், இலங்கை, பிரான்ஸ், ஐக்கிய அரபு நாடு, மொரிசியஸ் ஆகிய நாடுகள் தற்பொழுது UPI சேவையை அங்கீகரித்து இருக்கிறது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News