கொரோனாவை வீழ்த்த 70% மக்களுக்கு தடுப்பூசி போடவேண்டும் : உலக சுகாதார அமைப்பு தகவல்.!
உலக அளவில் பல நாட்டு மக்களை அச்சுறுத்தி வருவதாக இந்த வைரஸ் தற்போது காணப்படுகிறது. குறிப்பாக பல நாடுகளில் உள்ள மக்களையும் மற்றும் அவர்களுடைய பொருளாதாரத்தையும் மிகவும் பாதித்ததாக இந்தக் கொடிய தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் உலக சுகாதார அமைப்பின் சார்பில் பல்வேறு அறிவுரைகள் உலகநாடுகளுக்கு வழங்கப்பட்டன ஆனால் தற்போது உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய இயக்குனரான ஹான்ஸ் க்ளூக் அவர்கள் தற்பொழுது ஒரு அதிர்ச்சி தரும் முடிவுகளை கூறியுள்ளார்.
அதாவது, ஐரோப்பிய இயக்குனர் இந்தக் கரோனா பற்றி கூறுகையில், "கொரோனா தொற்றுநோய் குறைந்தது 70% மக்களுக்கு தடுப்பூசி போடும் வரை கொரோனா பாதிப்பை முழுமையாக கட்டுப்படுத்த முடியாது என்றும், ஐரோப்பாவில் தடுப்பூசி போடும் பணிகள் இன்னும் மிக மெதுவாகவே உள்ளதாகவும்" தெரிவித்தார். மேலும் அனைவருக்கும் குறிப்பாக 70% மக்களுக்கு தோற்று தடுப்பூசியை போட்டு முடித்த பிறகு இந்த முடிவுக்கு வந்துவிடும் என்று உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பாவின் பிராந்திய இயக்குனர் ஹான்ஸ் க்ளூக் அவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பின் போது இவ்வாறு தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் தொற்றின் புதிய மாறுபாடுகளின் அதிகரித்த தொற்று அவரது முக்கிய கவலைகளில் ஒன்றாகும் என்றும் க்ளூக் கூறினார். பிப்ரவரி 2020 முதல் இந்த பதவியை வகித்துவரும் பிராந்திய இயக்குனர் க்ளூக், ஒற்றுமைக்கான அழைப்புகளைப் பாராட்டிய அதே வேளையில், தடுப்பூசிகளை விரைவாக வெளியிடுவது மிக முக்கியமானது என்று அவர் வலியுறுத்தினார். ஐரோப்பிய ஒன்றியத்தில், 36.6% மக்கள் மட்டும்தான் குறைந்தது ஒரு டோஸைப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.