மதுரையில் 70 வருடமாக இருந்த படிப்பக இடத்தை இடித்து தள்ளிய தி.மு.க பிரமுகர்?

Update: 2021-06-29 01:30 GMT

மதுரை ஆரப்பாளையத்தில் நீண்டகாலமாக இருந்து வந்த 'தூக்குமேடை' பாலு நினைவு படிப்பகத்தை தி.மு.க பிரமுகர் ஒச்சுபாலு இடித்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை ஆரப்பாளையத்தில் உள்ள படிப்பகத்தை ஏழை எளிய மக்கள் அன்றாட நாட்டு நடப்புகளை தெரிந்து கொள்ளவும், உலக விஷயங்களை புரிந்து கொள்ளவும் கடந்த 70 வருடங்களாக பயன்படுத்தி வருகின்றனர்.

தி.மு.க-வின் முன்னாள் பகுதி செயலாளர் ஒச்சு பாலு இந்த படிப்பகத்தை நிலத்தை அபகரிப்பதற்காக அகற்றிட பெரும் முயற்சி எடுத்து வந்தார் என்றும் ஏற்கனவே அவருடைய நடவடிகைகளால் இப்பகுதி மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியிருக்கின்றனர் நேரும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

இந்த நிலையில் படிப்பகம் இருப்பது அவருக்கு இடைஞ்சலாக இருப்பதால் அவருடைய ஆட்கள் மூலம் இடித்துள்ளார் என்று கூறப்படுகிறது. இதனைதொடர்ந்து அப்பகுதியில் உள்ள கூட்டணிக் கட்சியான சி.பி.எம் கட்சியை சேர்ந்தவர்கள் தி.மு.க பிரமுகர் ஒச்சு பாலு தொல்லை தாங்க முடியாமல் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனிடம் மற்றும் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கும் புகார் அனுப்பியுள்ளனர். ஆனால் இதுவரை ஏதும் நடவடிக்கைகள் தி.மு.க எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது.

Source - ஜூனியர் விகடன்

Similar News