முதல்முறையாக இந்திய பொருளாதாரம் கண்ட சாதனை: 700 பில்லியன் டாலரை கடந்த அந்நிய செலவாணி கையிருப்பு!

Update: 2024-10-05 05:51 GMT

நாட்டின் பொருளாதார செயல்பாடுகளை நிலையாக வைத்திருப்பதில் அந்நிய செலவாணியின் கையிருப்பு முக்கிய பங்காற்றி வருகிறது. அதன்படி 2024 ஆம் ஆண்டில் இந்தியாவின் அந்நிய செலவாணி கையிருப்பு 700 பில்லியன் டாலரைக் கடந்துள்ளது. 

அதாவது 2022 ஆம் ஆண்டில் அன்னிய செலவாணி கையிருப்பில் 71 பில்லியன் டாலர் குறைந்தது. ஆனால் 2023 ஆம் ஆண்டு 58 பில்லியன் டாலர் அந்நிய செலவாணி கையிருப்பு அதிகரித்தது. அந்நிய செலவாணி கையிருப்பு குறைந்தால் நாட்டின் பொருளாதாரம் நெருக்கடியை சந்திக்கும். மேலும் கடந்த மாதம் ரிசர்வ் வங்கி வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி ஆகஸ்ட் 23ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் நாட்டின் அந்நிய செலவாணி கையிருப்பானது 7 மில்லியன் டாலர் அதிகரித்து 681 பில்லியன் டாலராக உயர்ந்தது. 

இந்த நிலையில், முதல்முறையாக இந்தியாவின் அந்நிய செலவாணி கையிருப்பானது 700 பில்லியன் டாலரை தாண்டி குறிப்பிடத்தக்க வளர்ச்சியை தொடர்ந்து வருகிறது. நாட்டின் இந்த சாதனையின் மூலம் 700 பில்லியன் டாலர் அந்நிய செலவாணி கையிருப்பில் உலக அளவில் நான்காவது பொருளாதரமாக இந்தியா நிலை பெற்றுள்ளது. 

கடந்த வாரத்தில் அந்நிய செலவாணி கையிருப்பு 2.838 பில்லியன் டாலர் அதிகரித்து, 692.296 பில்லியன் டாலராக இருந்தது. அதோடு இதுவரை 2024 ஆம் ஆண்டில், இந்தியாவின் அந்நிய செலவாணி கையிருப்பு 87.6 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டு முழுவதும் காணப்பட்ட கிட்டத்தட்ட 62 பில்லியன் டாலரை தாண்டி புதிய சாதனை படைத்துள்ளது. 


Tags:    

Similar News