நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் மேம்பாட்டிற்காக மத்திய அரசு ரூ7,000 கோடி நிதி ஒதுக்கீடு!

Update: 2025-07-16 15:45 GMT

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின்(NLCIL)மேம்பாட்டிற்காக ரூபாய் 7,000 கோடி நிதியை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒதுக்கீடு செய்துள்ளது


இது குறித்து மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்களான நவரத்னா நிறுவனங்களில் ஒன்றான இந்த NLCIL நிறுவனமானது 1400 மெகாவாட் தயாரிப்பதற்கான 7 புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை செயல்படுத்தி வருகின்ற நிலையில் 2030-ஆம் ஆண்டிற்குள் 10 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தயாரிப்பதற்கான புதிய திட்டங்களுக்கு நமது மத்திய அமைச்சரவை 7,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. இதன்மூலம் தேசத்தின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தேவையை பூர்த்தி செய்வதில் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் பெரும் பங்களிப்பினை வழங்கும் என தெரிவித்துள்ளார் 

Tags:    

Similar News