இந்தியாவின் ஏற்றுமதி 73.55 பில்லியன் அமெரிக்க டாலர்.. கடந்த ஆண்டை விட 11.86% அதிகரிப்பு..
2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதி (வணிகம் மற்றும் சேவைகள் இணைந்து) 73.55 பில்லியன் அமெரிக்க டாலராக மதிப்பிடப் பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு பிப்ரவரியைவிட 14.20 சதவீத நேர்மறையான வளர்ச்சியை வெளிப்படுத்துகிறது. பிப்ரவரியில் ஒட்டுமொத்த இறக்குமதி 75.50 பில்லியன் அமெரிக்க டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு பிப்ரவரியைவிட 10.13 சதவீத நேர்மறையான வளர்ச்சியைக் காட்டுகிறது. 2023-24-ல் ஏப்ரல் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதி (வணிகம் மற்றும் சேவைகள் இணைந்து) 709.81 பில்லியன் அமெரிக்க டாலராக மதிப்பிடப் பட்டுள்ளது. இது முந்தைய நிதியாண்டின் இதே காலக்கட்டத்தைவிட 0.83 சதவீதம் நேர்மறையான வளர்ச்சியைக் காட்டுகிறது. இந்த நிதியாண்டின் ஏப்ரல் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரையிலான ஒட்டுமொத்த இறக்குமதி 782.05 பில்லியன் அமெரிக்க டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது.
இது முந்தைய ஆண்டின் அதே காலகட்டத்தைவிட (-) 4.64 சதவீத எதிர்மறை வளர்ச்சியைக் காட்டுகிறது. 2023 பிப்ரவரியில் 37.01 பில்லியன் அமெரிக்க டாலருடன் ஒப்பிடுகையில் பிப்ரவரி 2024-ல் வணிக ஏற்றுமதி 41.40 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. பிப்ரவரி 2023 இல் 53.58 பில்லியன் அமெரிக்க டாலருடன் ஒப்பிடுகையில் பிப்ரவரி 2024 இல் வணிக இறக்குமதி 60.11 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. ஏப்ரல் - பிப்ரவரி 2023-24 காலகட்டத்தில் வணிக ஏற்றுமதி 394.99 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது, இது ஏப்ரல்-பிப்ரவரி 2022-23 இல் 409.11 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது.
ஏப்ரல்-பிப்ரவரி 2023-24 காலகட்டத்தில் வணிக இறக்குமதி 620.19 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது, இது ஏப்ரல்-பிப்ரவரி 2022-23 இல் 655.05 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. ஏப்ரல்-பிப்ரவரி 2023-24 க்கான வணிக வர்த்தக பற்றாக்குறை 225.20 பில்லியன் அமெரிக்க டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது, இது ஏப்ரல்-பிப்ரவரி 2022-23 இல் 245.94 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது.
Input & Image courtesy: News