பிரதமரின் சூரிய வீடு, இலவச மின்சார திட்டத்திற்கு ஒப்புதல், ₹75,021 கோடி ஒதுக்கீடு!

Update: 2024-03-01 13:15 GMT

சமீபத்தில் மத்திய அரசு 2024 - 25 ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில் பிரதமரின் சூரிய வீடு என்ற திட்டத்தின் கீழ் வீட்டு கூரையின் மேல் சோலார் பேனல்களை அமைக்கும் வீடுகளுக்கு 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. 

இதனை பிரதமர் நரேந்திர மோடி கடந்த பிப்ரவரி 13-ஆம் தேதி தொடங்கி வைத்தார். அதோடு இந்த திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் ஒரு கோடி வீடுகளில் சூரிய ஒளி மின்சார பேனல்கள் அமைக்க திட்டமிடப்பட்டிருந்தது. இதற்கான விண்ணப்பத்தையும் வீடுகளில் மேல் கூரையில் சோலார் பேனல்கள் பொருத்துவதற்கு போஸ்ட்மேன்கள் வீடுகளுக்கே சென்று கைபேசி மூலம் பதிவு செய்ய தபால் துறை ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டது. 

இந்த திட்டத்தின் மூலம் கூடுதலாக 30 கிகாவாட் சூரிய ஒளி மின்சாரம் உற்பத்தி செய்யப்பட உள்ளது. அதனால் அடுத்த 25 ஆண்டுகளுக்கு 72 கோடி கார்பன் மற்றும் அதற்கு இணையான உமிழ்வு குறைக்கப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் 17 லட்சம் நேரடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவதோடு இந்த திட்டத்திற்கு குறைந்தபட்ச 30 ஆயிரம் ரூபாயிலிருந்து 78 ஆயிரம் ரூபாய் வரை மானியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பிரதமரின் சூரிய வீடு இலவச மின்சார திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல் வழங்கியதோடு 75,021 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது. 

Source : Dinamalar 

Similar News