தமிழ்நாட்டில் 8 ரயில் நிலையங்கள் உட்பட 103 அம்ரித் பாரத ரயில் நிலையங்கள்:மே 22 இல் பிரதமர் மோடி திறப்பு!
நாடு முழுவதும் அம்ரித் பாரத் ரயில் திட்டத்தின் கீழ் பல ரயில் நிலையங்கள் புதுப்பிக்கப்பட்டு வருகிறது அந்த வகையில் 103 அம்ரித் பாரத ரயில் நிலையங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி 2025 மே 22 அன்று தொடங்கி வைப்பார். இவற்றில் தமிழ்நாட்டின் 8 ரயில் நிலையங்கள் உள்ளன
சூலூர்பேட்டை, பரங்கிமலை (செயின்ட் தாமஸ் மவுண்ட்), சாமல்பட்டி, சிதம்பரம், திருவண்ணாமலை, மன்னார்குடி, ஸ்ரீரங்கம், விருத்தாசலம், குளித்துறை ஆகியவை தமிழ்நாட்டில் இடம்பெற்றுள்ள அம்ரித் பாரத ரயில் நிலையங்களாகும். புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மாஹே அமிர்த பாரத ரயில் நிலையங்களில் ஒன்றாக இருக்கும்