ஆபரேஷன் சிந்து மூலம் ஈரானில் இருந்து நாடு திரும்பிய இந்தியர்கள்:மேலும் 800 பேர் திரும்ப விருப்பம்!
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே கடந்த சில நாட்களாக போர் அதிகமாக நடந்து வருவதால் ஆப்ரேஷன் சிந்து மூலம் ஈரானில் உள்ள இந்தியர்கள் அழைத்து வரப்பட்டு வருகின்றனர்
ஏற்கனவே ஈரானில் உள்ள இந்தியர்களை அழைத்து வர மத்திய வெளியுறவு அமைச்சகத்திடம் தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேட்டுக் கொண்டிருந்தார் மேலும் எடுக்கப்படும் நடவடிக்கைகள் பற்றியும் கேட்டு இந்தியர்கள் நாட்டிற்கு திரும்புவார்கள் என உறுதி அளித்திருந்தார் அந்த வகையில் ஈரானில் உள்ள இந்திய தூதரகமும் மத்திய வெளியுறவு அமைச்சகமும் அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது
அதன்படி இதுவரை நான்கு தனி விமானங்களில் 1,100 பேர் தாயகம் திரும்பி உள்ளனர் இதில் மாணவர்களும் அடங்குவர் நேற்று மாலை டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தை 300க்கும் மேற்பட்டவர்களுடன் ஐந்தாவது விமானம் வந்தடைந்தது அதனால் இதுவரை 1,428 பேர் ஈரானில் இருந்து அழைத்து வரப்பட்டுள்ளனர் அது மட்டுமின்றி மேலும் 800 பேர் நாடு திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளனர்