குடும்பத்தை மதம் மாற்றி ₹80,000 பணத்தைப் பறித்துக் கொண்டு புற்றுநோயை குணப்படுத்துவதாக ஏமாற்றிய மதபோதகர்!

Update: 2021-04-15 02:48 GMT

சுகமளிக்கும் பிரார்த்தனை (Healing prayers) மோசடியால் மும்பையில் ஒரு குடும்பம், குடும்ப உறுப்பினர்களில் ஒருவரை இழந்ததோடு ₹80,000 பணத்தையும் இழந்துள்ளது. சுபம் பண்டிட் என்பவர் தனது குடும்பத்துடன் மும்பையில் வசித்து வருகிறார்.

இவரது சகோதரி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். ஆனால் சிகிச்சை எதுவும் பலனளிக்கவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து சகோதரி மற்றும் தாயுடன் பல்விந்தர் சிங் என்ற மத போதகரை சந்தித்து தனது சகோதரியை குணப்படுத்த சுபம் பண்டிட் பஞ்சாப் மாநிலம் ஜலந்தருக்கு சென்றுள்ளார்.

அங்கே சுபம் குடும்பத்தினரை மதம் மாற்றியதோடு அவர்களிடம் இருந்த ₹80,000 பணத்தையும் பறித்துக் கொண்டு புனித நீர் என்று எதையோ கொடுத்து ஏமாற்றியுள்ளனர்‌. ஜலந்தர் சென்றடைந்த சுபம் பண்டிட்டை மத போதகர் பல்விந்தர் சிங்கின் சிஷ்யர் ஒருவர் அணுகியுள்ளார். அப்போது எப்படிப்பட்ட நோயையும் குணப்படுத்தும்‌ வல்லமை பல்விந்தருக்கு இருப்பதாக அவர் கூறியுள்ளார் ‌

இதையடுத்து தேஜ்பூர் என்ற கிராமத்தில் உள்ள ஒரு சர்ச்சில் மத போதகர் பல்விந்தரை சந்திக்க முடிவு செய்துள்ளனர். அங்கு சென்று மத போதகரை சந்தித்து போது 'சிகிச்சைக்காக' ₹1 லட்சம் ரூபாய் வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால் சுபம் பண்டிட்டிடம் அவ்வளவு பணம் இல்லாததால் ₹80,000 கொடுப்பது என்று முடிவு செய்துள்ளனர்.

சுபம் ₹80,000 பணத்தைக் கொடுத்து விட 12 நாட்கள் அங்கேயே தங்க வைத்து அலைக்கழித்து மத போதகர் பல்விந்தர் அவர்களை கட்டாய மத மாற்றம் செய்து புனித நீர், எண்ணெய் என்ற பெயரில் எதையோ கொடுத்துள்ளார். ஆனால் சுபம் பண்டிட்டின் சகோதரி உயிர் பிழைக்கவில்லை. கொடுத்த பணத்தையும் திருப்பித் தர‌ மறுத்துள்ளனர். இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News