அமெரிக்கா இந்தியாவிற்கு விற்பனை செய்ய போகும் ரூ.824 கோடி மதிப்புடைய ஆயுதங்கள்!!
அமெரிக்க பாதுகாப்பு ஒத்துழைப்பு அமைப்பானது வெளியிட்டுள்ள அறிக்கையில் ரூ.824 கோடி மதிப்புடைய வெளிநாட்டு ஆயுத விற்பனை தொடர்பான இரண்டு திட்டங்களுக்கு தற்பொழுது வெளியுறவுத்துறை முதல் அளித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்படி ரூ.418 கோடி மதிப்புள்ள எக்ஸ்காலிபர் ஏவுகணை மற்றும் ரூ.406 கோடி மதிப்புடைய ஈட்டி ஏவுகணை ஆகியவை உள்ளடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் தேசிய பாதுகாப்பு இலக்கும், அமெரிக்காவின் வெளிநாட்டு கொள்கை போன்றவை ஆதரிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய இரண்டு நாடுகளுக்கும் இடையில் உறவு வலுப்படவும், அமைதி காக்கவும் அரசியல் ரீதியான மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கு சரியாக இருக்கும் என்று தெரிய வருகிறது. அது மட்டுமல்லாமல் இந்தியாவின் பாதுகாப்பு துறைக்கும் ஊக்கம் அளிக்கும் வகையில் இருப்பதோடு காலத்தில் ஏற்படும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளவும், இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்பை வலுப்படுத்தவும் அளவிற்கு மேம்படுத்த முடியும் என்று தெரியவந்துள்ளது.
கடந்த அக்டோபர் 31ஆம் தேதி இந்தியாவின் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சரான பீட் ஹெக்செத்தை மலேசியாவின் கோலாலம்பூரில் சந்தித்து நாடுகளுக்கு இடையிலான உறவை வலுப்படுத்துவதற்காக 10 ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டதாக தகவல் வெளியாகியது. இந்த ஒப்பந்தத்தின்படி ரூ.824 கோடி மதிப்புடைய ஆயுதங்களை அமெரிக்கா இந்தியாவிற்கு விற்பனை செய்ய ஒப்புதல் வழங்கியுள்ளது.