சென்னை ஐஐடியுடன் மத்திய அரசு போட்ட ரயில்வே ஒப்பந்தம்:8.34 கோடி ரூபாய் நிதி செலவு!

Update: 2024-12-07 10:29 GMT

மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷணவ் நாட்டில் முதல்முறையாக சென்னை தையூரில் சென்னை ஐஐடியுடன் இணைந்து 410 மீட்டர் தூரத்திற்கு ஹைபர் லூப் டெஸ்ட் ட்ராக் அமைக்கப்பட உள்ளது பற்றிய வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்தியாவில் ரயில் போக்குவரத்து தொடர்ச்சியாக அதிக நவீனத்தையும் தொழில்நுட்பத்தையும் பெற்று வருகிறது அந்த வரிசையில் அதிவேக ரயில் போக்குவரத்து அடுத்த கட்டத்தை எட்டும் வகையில் ஹைப்பர் லூப் தொழில்நுட்பம் ரயில்வே துறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது 

ஹைபர் லூப் என்பது குறைந்த அழுத்த குழாய்களில் காந்தத்தின் இழுக்கும் சக்தியை பயன்படுத்தி விமான வேகத்தில் ரயில்களை இயக்கும் தொழில்நுட்பமாகும் இந்த தொழில்நுட்பத்தின் மூலம் பயணிகள் மற்றும் சரக்கு ரயில் போக்குவரத்து வசதியை கொடுக்க மத்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன்னோட்டமாக டெஸ்ட் ட்ராக் அமைக்கவும் ரயில்வே அமைச்சகம் சென்னை ஐஐடியுடன் ரயில்வே ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது அதோடு இதற்காக 8.34 கோடி ரூபாய் ஒதுக்கி செலவிடப்பட்டுள்ளது

ரயில்வே அமைச்சகம் சென்னை ஐஐடியுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் படி டெஸ்ட் ட்ராக்காக சென்னை ஐஐடி தையூர் வளாகத்தில் 2 மீட்டர் நீளத்திற்கு 410 மீட்டர் தூரத்திற்கு பிரத்தியேக சோதனை ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது 

Tags:    

Similar News