மோடி அரசின் சாதனை : பத்து ஆண்டுகளில் 88 சதவீதம் அதிகரித்த மருத்துவக் கல்லூரிகள்!
கடந்த 10 ஆண்டுகளில் மோடி அரசின் அளப்பரிய சாதனையால் ஏகப்பட்ட மாற்றங்களும் முன்னேற்றங்களும் நாட்டில் நிகழ்ந்துள்ளன.கடந்த 10 ஆண்டுகளில் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 88 சதவீதம் அதிகரித்துள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 88 சதவீதம் அதிகரித்துள்ளது. தற்போது நாட்டில் 731 மருத்துவக் கல்லூரிகள் உள்ளதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ள மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் அனுபிரியா பட்டேல் "மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கையை அரசு அதிகரித்தவுடன் எம்.பி.பி.எஸ் மருத்துவ படிப்புகளுக்கான இடங்களையும் அதிகரித்துள்ளது.
2014 ஆம் ஆண்டுக்கு முன்பு 387 ஆக இருந்த மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை தற்போது 731 ஆக 88 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும் 2014 ஆம் ஆண்டுக்கு 51,348 ஆக இருந்த எம். பி.பி.எஸ் இடங்களின் எண்ணிக்கை தற்போது 118 சதவீதம் அதிகரித்து ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 112 ஆக உயர்ந்துள்ளது. 2014 ஆம் ஆண்டுக்கு முன்பு 31,185 ஆக இருந்த முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான இடங்களின் எண்ணிக்கை தற்போது 72,627-ஆக 133 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த 2021- 22 ஆம் ஆண்டில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 48,212 இளநிலை மருத்துவ படிப்புக்கான இடங்களும் 28,260 முதுநிலை மருத்துவ படிப்புக்கான இடங்களும் இருந்தன.
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 44,365 இளநிலை மருத்துவ படிப்புக்கான இடங்களும் 19,362 முதுநிலை மருத்துவ படிப்புக்கான இடங்களும் இருந்தன. 2023- 24 ஆம் ஆண்டில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 56,300 இளநிலை மருத்துவ படிப்புக்கான இடங்களும் 33,416 முதுநிலை மருத்துவ படிப்புக்கான இடங்களும் இருந்தன. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 52,640 இளநிலை மருத்துவ படிப்புக்கான இடங்களும் 21,418 முதுநிலை மருத்துவ படிப்புக்கான இடங்களும் இருந்தன" என தெரிவித்துள்ளார்.