சத்தீஸ்கரில் 9 நக்சல்கள் கைது.. காவல்துறை அதிரடி நடவடிக்கை..

Update: 2024-06-08 03:36 GMT

சத்தீஸ்கர் மாநிலத்தில் அமைந்திருக்கும் பிஜப்பூர் மாவட்டத்தில் உள்ள பர்சேகர் பகுதியில், இரு போலீசார் கடந்த மாதம் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, காரை நக்சல்கள் வெடிகுண்டு வைத்து தகர்த்தனர். இதில் கார் சேதமடைந்த நிலையில், அதில் பயணித்த போலீஸ் அதிகாரி உட்பட இருவரும் காயமின்றி உயிர் தப்பினர். இந்த ஒரு நக்சல் தாக்குதல் அங்கு பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. குறிப்பாக காவல்துறைக்கே இந்த ஒரு நிலைமை?  என்றும் மக்கள் தரப்பில் இருந்து கேள்விகள் எழுப்பப்பட்டன.


இந்த தாக்குதலில் தொடர்புடைய ஐந்து நக்சல்களை பிடித்து தருபவர்களுக்கு, தலா 10,000 ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று அந்த மாநில காவல்துறை சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது சத்தீஸ்கரில் பர்சேகர் பகுதியில் பதுங்கியிருந்த 9 நக்சல்களை, போலீசார் அதிரடி நடவடிக்கையாக கைது செய்தனர். பிடிபட்ட நபர்களில் ஐந்து நக்சல்கள் போலீஸ் காரை தாக்கியதில் தொடர்புடையவர்கள் என தெரிய வந்து இருக்கிறது.

இந்நிலையில் குப்ரேல் கிராமங்களில் பதுங்கியிருந்த 5 நக்சல்கள் மற்றும் மேடட் பகுதியில் பதுங்கியிருந்த 4 நக்சல்கள் என மொத்தம் ஒன்பது பேரை போலீசார் கைது செய்தனர். மேடட் பகுதியில் நக்சல் அமைப்பில் உறுப்பினர்களாக இருந்த நான்கு பேரில், தீவிர உறுப்பினராகச் செயல்பட்ட லட்சு பூனம் என்பவரை பிடித்து தருபவர்களுக்கு, 5 லட்சம் ரூபாய் பரிசு தருவதாக அரசு அறிவித்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News