திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உத்தரவு பிறப்பித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் எப்போதும் இப்படித்தான்! உண்மையை உடைத்த வழக்கறிஞர்கள்!

By :  G Pradeep
Update: 2025-12-12 15:17 GMT

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்தது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்த நிலையில் நீதிபதிக்கு ஆதரவாகவும் எதிராகவும் பலர் கருத்துக்களை தெரிவித்து வந்தனர். 

அது மட்டுமல்லாமல் நீதிபதியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.பிக்கள் நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கலவை சபாநாயகரிடம் மனு அளித்து வந்தனர். 

இந்த மனுவிற்கு அமித்ஷா எதிர்ப்பு தெரிவித்த நிலையில் மதுரை மாவட்ட நீதிமன்றத்தின் வழக்கறிஞர்களும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமி நாதன் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் 2025 நவம்பர் 30ம் தேதி வரை 1,20,426 விசாரித்து முடித்து வைத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இவர் கடந்த ஒன்பது ஆண்டுகளில் 2,138 ரிட் மேல்முறையீடு, 41,920 ரிட், 3,751 நீதிமன்ற அவமதிப்பு, 434 ஆள்கொணர்வு, 18,392 குற்றவியல், 540 குற்றவியல் மேல்முறையீடு மற்றும் 780 குற்றவியல் சீராய்வு உட்பட 73,505 பிரதான மனுக்களும், 46,921 இதர வகை மனுகளும் விசாரித்து மொத்தமாக 1,20,426 வழக்குகளை முடித்து வைத்திருப்பதாக தெரிய வருகிறது. 

இந்த நிலையில் சில வழக்கறிஞர்கள் நீதிபதி நீதிமன்ற நேரத்தையும் தாண்டி விசாரணை நடத்துவார் என்றும், காலை 10.30 மணிக்கு தொடங்கும் நீதிமன்ற அமர்விற்கு 9 மணிக்கே நீதிபதி வந்து விசாரணையை தொடங்கி விடுவார் என்றும் கூறியுள்ளனர். 

Tags:    

Similar News