மோடி அரசில் 90% விபத்துக்கள் குறைந்துள்ள ரயில்வே துறை!
முந்தைய காலகட்டத்திலும் ஒப்பிடுகையில் தற்போது ரயில் விபத்துகளின் எண்ணிக்கை 90 சதவீதம் குறைந்துள்ளது ரயில்களின் பாதுகாப்பு விஷயத்தில் பிரதமர் செலுத்தி வரும் கவனம் காரணமாக இது சாத்தியமாகியுள்ளது என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.;

மக்களவையில் ரயில்வே துறைக்கான மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்துக்கு பதில் அளித்து அவர் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:-
ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவ் ரயில்வே அமைச்சராக இருந்த காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் தற்போது ரயில் விபத்துகளின் எண்ணிக்கை 90 சதவீதம் குறைந்துள்ளது. ரயில்களின் பாதுகாப்பு விஷயத்தில் பிரதமர் செலுத்தி வரும் கவனம் காரணமாக இது சாத்தியமாகியுள்ளது. லாலு பிரசாத் அமைச்சராக இருந்தபோது ஓராண்டில் 234 ரயில் விபத்துகளும் 464 ரயில் தடம் புரளும் சம்பவங்களும் நேரிட்டன. மம்தா பானர்ஜி ரயில்வே அமைச்சராக இருந்தபோது ஆண்டுக்கு 165 ரயில் விபத்துகளும், 230 ரயில் தடம்புரளும் சம்பவங்களும் நேரிட்டன.
மல்லிகார்ஜுன கார்கே அமைச்சராக இருந்தபோது ஆண்டுக்கு 118 விபத்துகளும் 263 ரயில் தடம் புரளும் சம்பவங்களும் நேரிட்டன. தற்போது ஆண்டுக்கு 30 ரயில்வே விபத்துகளும் 43 ரயில் தடம் புரளும் சம்பவங்களும் மட்டுமே நிகழ்கின்றன. 2025-26 ஆம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட் வரலாற்று சிறப்பு மிகுந்ததாகும். கரோனா பெருந்தொற்று கால சவால்களில் இருந்து இந்திய ரயில்வே துறை மீண்டு வந்துள்ளது. ரயில் நிலையங்களில் கூட்டநெரிசல் ஏற்படுவதைத் தடுக்க ரயில்வே நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பண்டிகை காலங்களில் கூட்ட நெரிசலை தவிர்க்க சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
கடந்த ஆண்டு ஹோலி பண்டிகை காலத்தில் 64 சிறப்பு ரயில்களை இயக்கினோம். கடந்த ஆண்டு கோடை காலத்தில் 13,000 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. கடந்த ஆண்டு தீபாவளி மற்றும் ஷார்ட் பூஜை பண்டிகளின் போது 8,000 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. மகா கும்பமேளா காலகட்டத்தில் 17,330 சிறப்பு ரயில்களும் இந்த ஆண்டு ஹோலி பண்டிகை காலத்தில் 1,107 சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டன. புதுடெல்லி ரயில் நிலையத்தில் கடந்த மாதம் கூட்ட நெரிசல் காரணமாக உயிரிழப்புகள் நேரிட்டன. இது போன்ற கூட்ட நெரிசல்களைக் கட்டுப்படுத்த ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமராக்களை நிறுவி கண்காணிப்பது உட்பட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.