நாட்டின் முதலாவது 9,000 எச்பி திறன் கொண்ட ரயில் இன்சின்கள்:நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி!

Update: 2025-05-25 05:36 GMT

குஜராத் மாநிலம் தாஹோத் நகரில் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் ரூபாய் 20 ஆயிரம் கோடி செலவில் அமைக்கப்பட்ட ரயில்வே என்று உற்பத்தி தொழிற்சாலை மூலம் 9 ஆயிரம் எச்பி திறன் கொண்ட ரயில்வே இன்சின்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்த தொழிற்சாலை தயாரித்த முதலாவது ஒன்பதாயிரம் எச்பி திறன் கொண்ட லோகோமோட்டிவ் ரயில் இன்ஜினை பிரதமர் மோடி நாட்டிற்கு அர்பணிக்க உள்ளார் 

வருகின்ற 26 மற்றும் 27 ஆம் தேதி குஜராத் செல்லும் பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தின் காந்திநகர் கட்ச் மற்றும் தாஹோத் பகுதிகளில் நடைபெறும் பல விழாக்களில் கலந்து கொண்டு நலத்திட்ட பணிகளை தொடங்கி வைக்க உள்ளார் அந்த பயணத்தின் ஒரு நிகழ்வாகவே 9000 எச்பி திறன் கொண்ட லோகோமோட்டிவ் ரயில் இன்ஜினை நாட்டிற்கு அர்ப்பணிக்க உள்ளார் ஆண்டுதோறும் ரயில்வே என்று உற்பத்தி தொழிற்சாலை மூலம் 1,200 ரயில்வே இன்சின்கள் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது 

இந்த ரயில்வே இன்சின்கள் ஏசி வசதியுடன் 4,600 டன் எடையுள்ள சரக்குகளை எடுத்துச் செல்லும் திறன் கொண்டுள்ளது அதுமட்டுமின்றி பைலட்டுகளுக்காக கழிப்பறை வசதியும் இந்த இன்சினில் செய்து தரப்பட்டுள்ளது. மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட இந்த தொழிற்சாலையின் மூலம் அப்பகுதியில் சுற்றி உள்ள பத்தாயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது 

Tags:    

Similar News