ஜிஎஸ்டி வசூலில் புதிய சாதனையை எட்டிய இந்தியா:பிப்ரவரி மாத வசூலில் 9.1 சதவீதம் அதிகம்!

Update: 2025-03-01 16:08 GMT
ஜிஎஸ்டி வசூலில் புதிய சாதனையை எட்டிய இந்தியா:பிப்ரவரி மாத வசூலில் 9.1 சதவீதம் அதிகம்!

பொருள்கள் மற்றும் சேவைகள் மீதான வரி வசூல் கடந்த பிப்ரவரி மாதத்தில் 9.1 சதவீதம் அதிகரித்து 1.84 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது என மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது 

அதாவது கடந்த பிப்ரவரி மாதம் மத்திய ஜிஎஸ்டி 35,204 கோடி ரூபாயாகவும் ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூபாய் 90,870 கோடியாகவும் மாநில ஜிஎஸ்டி ரூபாய் 43,704 கோடியாகவும் கூடுதல் வரி ரூபாய் 13,868 கோடியாகவும் வசூல் ஆகியுள்ளதாக மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது

அதுமட்டுமின்றி உள்நாட்டு வருமானம் மற்றும் இறக்குமதி மூலம் கிடைத்த வருமானம் அதிகரித்ததால் கடந்த பிப்ரவரி மாதத்தில் வசூலான ஜிஎஸ்டி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வசூலான ஜிஎஸ்டியை விட 10 சதவீதம் அதிகமாக வசூல் ஆகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது 

Tags:    

Similar News