அலுவலக கணினிகளில் AI செயலிகள் பயன்படுத்த கூடாது.. மத்திய நிதியமைச்சகம் உத்தரவு!

Update: 2025-02-09 16:43 GMT

அலுவலகம் சார்ந்த பணிகளுக்கு பயன்படுத் தும் கணினி, டேப்லெட், அறிதி றன்பேசி ஆகியவற்றில் சாட்ஜி பிடி,டீப்சீக் உள்ளிட்ட எந்தவகை யான செயற்கை நுண்ணறிவு செய லிகள், மென்பொருள்களைப் பயன்படுத்தக் கூடாது என்று அதி காரிகளுக்கு மத்திய நிதியமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. தகவல்கள் கசியும் அபாயத்தைத் தடுப்பதற்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரி விக்கப்பட்டுள்ளது.


இது தொடர்பாக கடந்த ஜனவரி 29-ஆம் தேதி (பட்ஜெட் டுக்கு முன்பு) நிதியமைச்சகத்தின் அனைத்துப் பிரிவினருக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், 'அரசு சார்ந்த முக்கியத் தகவல்கள், கோப்புகளின் ரகசியம் காக்கப்பட வேண்டும் என்பதால் அலுவலகம் சார்ந்த, அலுவலகப் பயன்பாட்டுக்கான கணினி, மடிக்கணினி, அறிதிறன்பேசி உள் ளிட்டவற்றில் சாட்ஜிபிடி, டீப் சீக் உள்ளிட்ட எந்த வகையான செயற்கை நுண்ணறிவு செய லிகள், மென்பொருள்களைப் பயன்படுத்துவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்' என்று கூறப் பட்டுள்ளது.

குறைந்த செலவில் சீனாவால் தயாரிக்கப்பட்ட ‘டீப்சீக்' செயலி ஐபோன்களில் தரவிறக்கம் செய்வதில் முன்னிலை பெற்று,இத்துறையில் ஆதிக்கம் செலுத்தி வந்த அமெரிக்க தகவல்தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது. இதனால், அமெரிக்க நிறுவனங்களின் பங்குகளும் பெரும் சரிவைச் சந்தித்தன.

Tags:    

Similar News